Published : 09 Nov 2020 03:11 AM
Last Updated : 09 Nov 2020 03:11 AM

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 5.12 லட்சம் பேருக்கு சிகிச்சை

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 5.12 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் நேற்று 45,674 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85,07,754 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 49,082 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தேசிய அளவில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 92.49 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் 5,12,665 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 559 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,26,121 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் புதிதாக 3,959 பேருக்கு வைரஸ் தொற்றுஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 17,14,273 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 15,69,090 பேர் குணமடைந்துள்ளனர். 1,00,068 பேர் சிகிச்சையில் உள்ளனர். 45,115 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் புதிதாக 2,258 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 8,44,147 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 7,99,439 பேர் குணமடைந்துள்ளனர். 33,339 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11,369 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் புதிதாக 2,367 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 8,40,730 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 8,12,517 பேர் குணமடைந்துள்ளனர். 21,434 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,779 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் புதிதாக 1,894 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 4,95,421 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,65,250 பேர் குணமடைந்துள்ளனர். 22,991 பேர் சிகிச்சையில் உள்ளனர். 7,180 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் நேற்று 5,440 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,86,109 ஆக அதிகரித்துள்ளது. இதில் 4,02,477 பேர் குணமடைந்துள்ளனர். 83,261 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,692 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் புதிதாக 6,953 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 4,30,784 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,83,614 பேர் குணமடைந் துள்ளனர். 40,258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,912 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x