Published : 08 Nov 2020 03:11 AM
Last Updated : 08 Nov 2020 03:11 AM

தேசிய அளவில் நீர் மேலாண்மைக்கான சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு

தேசிய அளவில் நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலத்துக்கான விருதுக்கு தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஜல்சக்தி அமைச்சகம் அறிவித் துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டில் தேசிய அளவில் சிறந்த நீர்மேலாண்மைக்கான விரு தில் முதலிடத்துக்கு தமிழகம் தேர்வு செய் யப்பட்டுள்ளது. அடுத்தடுத்த இடங்களை மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பெற்றுள்ளன. சிறந்த மாவட்டங் கள் அடிப்படையில், தென் மாநில பிரிவில் முதல் மற்றும் 2-ம் இடங்களை வேலூர், கரூர் மாவட்டங்கள் பிடித்துள் ளன. ஆறு புதுப்பித்தல் என்ற வகையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல், நீர் பாதுகாப்பு என்ற வகையில் 2-வது இடத்துக்கு பெரம்பலூர் மாவட்டமும், நீர் மேலாண்மையில் சிறந்த நகர்ப்புற உள்ளாட்சிக்கான விருதில் 2-ம் இடத்துக்கு மதுரை மாநகராட்சியும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நீர் பாதுகாப்பு தொடர்பான சிறந்த ஆராய்ச்சிக்கான விருது பட்டியலில் 3 விருதுகளுக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வாகியுள்ளனர். முதல் இடத்துக்கு கோவை ஐசிஏஆர்- கரும்பு உற்பத்தி நிறுவனத்தின் ஹரி கருப்புசாமியும், 2- வது இடத்துக்கு சென்னை ஐஐடி-யின் டி.பிரதீப், 3-வது இடத்துக்கு சென்னை சுண்ணாம்பு கொளத்தூரில் உள்ள வா டெக் வபாத் நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

நீர் மேலாண்மையில் சிறந்த வீரர்கள் என்ற பிரிவின்கீழ், தென் மண்டலத்தில் முதல் 2 இடங்களுக்கான விருதுகளும் தமிழகத்துக்கு கிடைத்துள்ளன. அதன் படி, முதல் இடத்துக்கான விருது கோவை யில் உள்ள கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டனுக்கும், 2-ம் இடத்துக்கான விருது அண்ணா பல்கலைக்கழக பேரா சிரியர் சக்திநாதன் கணபதி பாண்டிய னுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீர் மேலாண்மையில் சிறந்த பள்ளி பிரிவில் முதல் இடத்துக்கான விருதுக்கு புதுச்சேரி, காட்டேரிக்குப்பம் இந்திரா காந்தி அரசு பள்ளி தேர்வு செய்யப்பட் டுள்ளது. இந்த விருதுகள் அனைத்தும் வரும் நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் வழங்கப்பட உள்ளதாக ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விருது பெற்றது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் பழனிசாமி கூறியிருப்பதாவது:

நீர்மேலாண்மையில் 2019-ம் ஆண்டுக் கான சிறந்த மாநிலமாக ஜல்சக்தி அமைச் சகத்தின் தேசிய விருதை தமிழகம் பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நீர்நிலைகளை புதுப்பித்தலில் வேலூர், கரூர் மாவட்டங்கள் முதல் இரு இடங் களையும், நீர் நிலைகளை பாதுகாப்பதில் பெரம்பலூர் மாவட்டம் இரண்டாம் இடத் தையும் பெற்றுள்ளன.

நீர்நிலைகளை மீட்டெடுப்பது மற்றும் பாதுகாப்பதில் ஒருங்கிணைந்த செயல் பாடுகளுக்காகவும், பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்காகவும் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதிகாரிகளின் அயராத முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x