Published : 04 Nov 2020 03:13 AM
Last Updated : 04 Nov 2020 03:13 AM

37 பேருக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருதுகள் 19 தமிழ் அறிஞர்களுக்கு முதல்வர் பழனிசாமி விருது வழங்கினார்

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2019-ம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 37 விருதாளர்களில், 19 விருதாளர்களுக்கு தமிழ்ச் செம்மல் விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார். உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன் உள்ளிட்டோர்.

சென்னை

தமிழ்நாடு தினம் விழாவையொட்டி, 2019-ம் ஆண்டுக்கான ‘தமிழ்ச் செம்மல்’ விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 37 பேரில் 19 பேருக்கு விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவையில், மறைந்த முன்னாள்முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி, தமிழ் வளர்ச்சிக்காக தொண்டுசெய்து வருவோர், தமிழ் அமைப்புவைத்து மொழிக்காக பாடுபடும்ஆர்வலர்களை பெருமைப்படுத்தும் வகையில், ‘தமிழ்ச் செம்மல்’ விருதுகள் கடந்த 2015-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2019-ம் ஆண்டுக்கான ‘தமிழ்ச் செம்மல்’ விருதுக்கு கோ.ப.செல்லம்மாள் (சென்னை), மரிய தெரசா (திருவள்ளூர்), எஸ்.குமார் (காஞ்சிபுரம்), ச.இலக்குமிபதி (வேலூர்), அ.க.ராசு (எ) பாளைவேந்தன் (கிருஷ்ணகிரி), எறும்பூர் கை.செல்வகுமார் (திருவண்ணாமலை), கல்லைக்கவிஞர் வீ.கோவிந்தராசன் (விழுப்புரம்), எஸ்.எம்.கார்த்திகேயன் (கடலூர்), த.மாயகிருட்டிணன் (பெரம்பலூர்), து.சேகர் (அரியலூர்), வ.முத்துமாரய்யன் (சேலம்), கவிஞர் மா.ராமமூர்த்தி (தருமபுரி), ப.சுப்பண்ணன் (நாமக்கல்) ஆகியோரும்,

எண்ணம்மங்கலம் அ.பழனிசாமி (ஈரோடு), சு.இளவரசி (கரூர்), அ.ஞானமணி (கோயம்புத்தூர்), முத்து சுப்ரமணியன் (திருப்பூர்), சபீதா போஜன் (நீலகிரி), அ.அந்தோணி துரைராஜ் (திருச்சி), அ.அ.ஞானசுந்தரத்தரசு (புதுக்கோட்டை), சொ.பகீரதநாச்சியப்பன் (சிவகங்கை), ஆதி நெடுஞ்செழியன் (தஞ்சாவூர்), இரா.கல்யாணராமன் (திருவாரூர்), சி. சிவசங்கரன் (நாகப்பட்டினம்), மை.அப்துல்சலாம் (ராமநாதபுரம்), பி.சங்கரலிங்கம் (மதுரை), அ.சு.இளங்கோவன் (திண்டுக்கல்), சா.பி.நாகராசன் (எ) தேனி ராஜதாசன் (தேனி), இரா.இளவரசு (விருதுநகர்), க.அழகிரிபாண்டியன் (திருநெல்வேலி) ஆகியோரும்,

நம்.சீனிவாசன் (தூத்துக்குடி),குமரி ஆதவன் (கன்னியாகுமரி), ந.கருணாநிதி (திருப்பத்தூர்), வத்சலா சேதுராமன் (செங்கல்பட்டு), த.தினகரன் (ராணிப்பேட்டை), உமாகல்யாணி (தென்காசி), பெ.அறிவழகன் (கள்ளக்குறிச்சி) என 37 விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 19 பேருக்கு தலைமைச் செயலகத்தில் நேற்று விருது வழங்கிய முதல்வர் பழனிசாமி, ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்தார். ‘தமிழ்ச் செம்மல்’ விருது பெற்ற மற்றவர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் அமைச்சர்களால் விருது வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், க.பாண்டியராஜன், தலைமைச் செயலர் கே.சண்முகம், தமிழ் வளர்ச்சி, செய்தி துறை செயலர் மகேசன் காசிராஜன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் கோ.விசயராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x