Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM

9 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் டெல்லி படுதோல்வி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல்

அபுதாபி

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அபுதாபியில் நேற்று பிற்பகலில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கேப்டன்ஸ்ரேயஸ் ஐயர் 25, ரிஷப் பந்த் 21, ரவிச்சந்திரன் அஸ்வின் 12 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்பரன்களில் நடையைக் கட்டினர். மும்பை அணி தரப்பில் ஜஸ்பிரித்பும்ரா, டிரென்ட் போல்ட் ஆகியோர்தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

111 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி14.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரராக களமிறங்கிய இஷன் கிஷன் 47 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் விளாசினார். மற்றொரு தொடக்க வீரரானகுயின்டன் டி காக் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

13 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இது 6-வது தோல்வி.அதுவும் அந்த அணி தொடர்ச்சியாக 4 தோல்வியை சந்தித்துள்ளது. 7 ஆட்டங்களில் வெற்றிபெற்று 14 புள்ளியுடன் உள்ள டெல்லி அணி கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பெற முடியும் என்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. டெல்லி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூவை நாளை எதிர்கொள்கிறது.

இன்றைய ஆட்டம்

சென்னை - பஞ்சாப்

இடம்: அபுதாபி

நேரம்: பிற்பகல் 3.30

கொல்கத்தா - ராஜஸ்தான்

இடம்: துபாய்

நேரம்: இரவு 7.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x