Vivo S2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

Vivo S2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
Updated on
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ எஸ்2 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் இப்போது விவோ எஸ்2 போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் ப்ரீமியம் செக்மென்டில் வெளிவந்துள்ளது. வரும் 11-ம் தேதி முதல் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும். சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் ‘எஸ்’ சீரிஸ் போனை விவோ அறிமுகம் செய்துள்ளது. மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.

விவோ எஸ்2 - சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

>> 6.83 இன்ச் AMOLED டிஸ்பிளே

>> மீடியாடெக் டிமான்சிட்டி 7360 டர்போ சிப்செட்

>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

>> பின்பக்கத்தில் இரண்டு கேமரா உள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா

>> 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

>> 8 ஜிபி ரேம்

>> 128, 256 ஜிபி ஸ்டோரேஜ்

>> 7,050mAh பேட்டரி

>> 44 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்

>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்

>> 5ஜி நெட்வொர்க்

>> இந்த போனின் விலை ரூ.39,999 முதல் தொடங்குகிறது

>> இந்த போன் ப்ரீமியம் செக்மென்ட் பிரிவில் வெளிவந்துள்ளது. இருப்பினும் இதன் ‘ரேம்’ திறன், ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம் இல்லாதது ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் பேசு பொருளாகி உள்ளது. ஸ்மார்ட்போன் உற்பத்தி செலவுகள் கூடி இருந்தாலும் ‘ரேம்’ திறன் சற்று கூடுதலாக இருந்திருக்கலாம் என்பது அவர்களின் கருத்து

Vivo S2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
ஜனநாயகக் குரலாக ‘ஜந்தர் மந்தர்’ மாறியது எப்படி? - டெல்லி போராட்டக் களத்தின் கதை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in