

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி எஸ்26 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் சாம்சங் கேலக்சி எஸ்26+ மற்றும் சாம்சங் கேலக்சி எஸ்26 அல்ட்ரா போன்களும் அறிமுகமாகி உள்ளது.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.
இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி ‘எஸ்’ வரிசையில் கேலக்சி எஸ்26 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் கேலக்சி எஸ்25 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருந்தது. கடந்த செப்டம்பரில் கேலக்சி எஸ்25 FE போன் அறிமுகமாகி இருந்தது. இந்த சூழலில் தற்போது கேலக்சி எஸ்26 போன் வெளிவந்துள்ளது.
சாம்சங் கேலக்சி எஸ்26 சிறப்பு அம்சங்கள்
6.3 இன்ச் AMOLED டிஸ்பிளே
ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜெனரேஷன் 5, Exynos 2600 சிப்செட்
50 + 12 + 10 மெகாபிக்சல் என பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது
12 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
12 ஜிபி ரேம்
256, 512 ஜிபி ஸ்டோரேஜ்
5 வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
4300 mAh பேட்டரி
25 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு
15 வாட்ஸ் வயர்லஸ் சார்ஜிங் அம்சம்
ரிவர்ஸ் சார்ஜிங் அம்சமும் இந்த போனில் உள்ளது
5ஜி நெட்வொர்க்
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
இந்த போனின் விலை ரூ.87,999 முதல் தொடங்குகிறது