Samsung Galaxy A08 போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

Samsung Galaxy A08 போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
Updated on: 
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி ஏ08 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.

இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி ‘ஏ’ வரிசையில் கேலக்சி ஏ08 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சர்வதேச சந்தையில் அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்சி ஏ08 போனின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

>> 6.7 இன்ச் எல்சிடி டிஸ்பிளே

>> மீடியாடெக் ஹீலியோ ஜி99+ சிப்செட்

>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

>> 4ஜிபி ரேம்

>> 64ஜிபி ஸ்டோரேஜ்

>> 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா

>> 50 + 2 மெகாபிக்சல் என பின்புறம் இரண்டு கேமரா உள்ளது

>> 6,000mAh பேட்டரி

>> 25 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு

>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்

>> மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

>> இதன் விலை ரூ.18,499

Samsung Galaxy A08 போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்துங்கள்: பிரதமர் மோடிக்கு பவன் கெரா வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in