வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்துங்கள்: பிரதமர் மோடிக்கு பவன் கெரா வலியுறுத்தல்

காங்கிரஸ் கட்சியின் ஊடக குழு தலைவர் பவன் கெரா

காங்கிரஸ் கட்சியின் ஊடக குழு தலைவர் பவன் கெரா

Updated on: 
1 min read

புதுடெல்லி: வாக்குச்சீட்டு முறையில் மக்களவை மற்றும் பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலை நடத்திட பிரதமர் நரேந்திர மோடி முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் ஊடக குழு தலைவர் பவன் கெரா வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

“தேர்தல் முடிவுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (இ.வி.எம்) தாக்கம் எதுவும் இல்லையென்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக நம்பினால், அதை வெறும் பேச்சால் அல்லாமல் செயல் மூலம் நிரூபிக்க வேண்டும். அதன் மூலம் தேர்தலில் பாஜக-வின் பலத்தை அவர் நிரூபிக்கட்டும்.

அந்த வகையில் இனி வரும் மக்களவை மற்றும் பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தல்களை வாக்குச்சீட்டு முறையில் நடத்த உறுதி அளிக்க வேண்டும்.

மேலும், எஸ்ஐஆர் நடைமுறையை ரத்து செய்வதோடு முறைகேடாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 13.3 கோடி வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வேண்டும். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்குங்கள். அவருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை ரத்து செய்யுங்கள்.

இதையெல்லாம் அவர் செய்யும் வரை, அவரது வாதங்கள் அனைத்தும் வெற்றுப்பேச்சு தான். அதை யாரும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று பவன் கெரா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பிஹார் மற்றும் கர்நாடகாவில் 28 மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களில் வென்று இருக்கும் என ஊகியுங்கள் என்று பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலடி தரும் வகையில் பவன் கெரா பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>காங்கிரஸ் கட்சியின் ஊடக குழு தலைவர் பவன் கெரா</p></div>
சென்னை சூப்பர் கிங்ஸின் பயிற்சியாளர் குழு அறிவிப்பு: மீண்டும் அணியில் ஆல்பி மோர்கல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in