Realme P4s ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

Realme P4s ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
Updated on
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி பி4எஸ் போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம்.

இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது.

இந்நிலையில், தற்போது பி4எஸ் போனை ரியல்மி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் ரியல்மி நிறுவனத்தின் பி4 சீரிஸில் ஒன்றாக வெளிவந்துள்ளது. ரியல்மி பி4எஸ் போனின் பேட்டரி பயனர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. வரும் செப்டம்பர் 3-ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வருகிறது. மூன்று விதமான வேரியன்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.

ரியல்மி பி4எஸ் ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

>> மீடியாடெக் டிமான்சிட்டி 7400 அல்ட்ரா சிப்செட்

>> 6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே

>> ஆண்ட்ராய்டு 17 இயங்குதளம்

>> 8, 12 ஜிபி ரேம்

>> 128, 256 ஜிபி ஸ்டோரேஜ்

>> 50 + 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா

>> 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா

>> 8,000mAh பேட்டரி

>> 80 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்

>> ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்

>> 5ஜி நெட்வொர்க்

>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்

>> இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

>> இந்த போனின் விலை ரூ.34,999 முதல் தொடங்குகிறது

Realme P4s ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
இரண்டு நாட்களுக்குள் முடிந்த மெக்கே டெஸ்ட்: ஆடுகளம் குறித்து கவாஸ்கர் கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in