Realme 16T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

Realme 16T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
Updated on
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி 16டி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது.

தற்போது இந்நிறுவனம் 16 சீரிஸ் போன்களின் வரிசையில் ரியல்மி 16டி 5ஜி ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. முந்தைய மாடலான ரியல்மி 16 போனில் இருப்பது போலவே இந்த போனின் பின்பக்கத்திலும் இடம்பெற்றுள்ள செல்ஃபி மிர்ரர் (Mirror) இடம்பெற்றுள்ளது. இதன் பேட்டரி, சிப்செட் உள்ளிட்டவையும் ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

ரியல்மி 16டி ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

>>6.8 இன்ச் எல்சிடி டிஸ்பிளே

>>மீடியாடெக் டிரான்சிட்டி 6300 சிப்செட்

>>ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

>>6ஜிபி, 8ஜிபி ரேம்

>>128ஜிபி, 256ஜிபி ஸ்டோரேஜ்

>>16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

>>50 + 2 மெகாபிக்சல் என இரண்டு கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது

>>கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு என மூன்று வண்ணத்தில் இந்த போன் வெளிவந்துள்ளது

>>8000 mAh பேட்டரி

>>45 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்

>>15 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்

>>யுஎஸ்பி டைப்-சி போர்ட்

>>5ஜி நெட்வொர்க்

>>இந்த போனின் விலை ரூ.29,999 முதல் தொடங்குகிறது

Realme 16T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைவு: இன்றைய விலை விவரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in