

சென்னை: 22 காரட் ஆபாரணத் தங்கம் விலை இன்று (மே 23) பவுனுக்கு ரூ.400 என விலை குறைந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று சந்தையில் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்நிலையில், கடந்த 13-ம் தேதி தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து அன்றைய நாளில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.670 என உயர்ந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
இந்த சூழலில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,730-க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,17,840-க்கும் விற்பனையாகிறது. நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 குறைந்தது குறிப்பிடத்தக்கது.
24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.440 என விலை குறைந்து, ஒரு பவுன் ரூ.1,28,552-க்கும், 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.320 என விலை குறைந்து, ஒரு பவுன் ரூ.98,880-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.295-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,95,000-க்கும் விற்பனையாகிறது.