இந்தியாவில் விற்பனைக்கு வந்தது Poco M8 Power ஸ்மார்ட்போன்: விலை, சிறப்பு அம்சங்கள்

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது Poco M8 Power ஸ்மார்ட்போன்: விலை, சிறப்பு அம்சங்கள்
Updated on
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் போக்கோ எம்8 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன தேசத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம்தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக லோகோ உடன் இயங்கி வரும் போக்கோ, பல்வேறு மாடல்களில் போன்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இந்தியாவில் தற்போது போக்கோ எம்8 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போனின் பேட்டரி, ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் ‘வெட்-டச்’ அம்சம் உள்ளிட்டவை கவனம் பெற்றுள்ளது. இந்த போன் இந்தியாவில் வெள்ளிக்கிழமை (ஆக.7) விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

போக்கோ எம்8 பவர் - சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

>> 6.99 இன்ச் AMOLED டிஸ்பிளே

>> ஸ்னாப்டிராகன் 4 ஜெனரேஷன் 4 சிப்செட்

>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

>> 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் உள்ள பிரதான கேமரா

>> 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா

>> 6, 8 ஜிபி ரேம்

>> 128 ஜிபி ஸ்டோரேஜ்

>> 8,000mAh பேட்டரி

>> 45 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்

>> ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்

>> இந்த போனுடன் சார்ஜர் வழங்கப்படுகிறது

>> 5ஜி நெட்வொர்க்

>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்

>> மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

>> இதன் விலை ரூ.24,999 முதல் தொடங்குகிறது

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது Poco M8 Power ஸ்மார்ட்போன்: விலை, சிறப்பு அம்சங்கள்
மெஸ்ஸி ஓய்வு பெறுவது எப்போது? - அர்ஜெண்டினா கால்பந்து சங்க தலைவர் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in