ஏ.ஐ. விழி​யால் பார்க்கலாம் | எளிதில் கற்கலாம் ஏஐ 28

ஏ.ஐ. விழி​யால் பார்க்கலாம் | எளிதில் கற்கலாம் ஏஐ 28
Updated on: 
2 min read

பார்​வையற்​றோரும் பார்​வைக் குறைபாடு கொண்​டோரும் தங்களைச் சுற்​றியுள்ள உலகை அறிந்​து​கொள்​ளவும், அன்​றாடப் பணிகளைச் சுய​மாக மேற்​கொள்​ளவும் உதவும் இல​வசச் செய்யறிவுச் செயலிதான் ‘Microsoft Seeing AI’. மைக்​ரோசாஃப்ட் நிறுவனத்​தால் உரு​வாக்​கப்​பட்​டுள்ள இந்​தச் செயலி, திறன்​பேசி கேமரா மூலம் எழுத்​துகள், பொருள்​கள், நபர்​கள், சுற்​றுப்​புறக் காட்​சிகள் உள்​ளிட்​ட​வற்றை அடை​யாளம் கண்டு, அவற்​றைக் குரல் வழி​யாக விவரிக்​கிறது.

கணி​னிப்​பார்வை (Computer Vision), இயந்​திரக் கற்​றல், ஒளி எழுத்​துணர்​தல் (OCR) போன்ற தொழில்​நுட்​பங்​களைப் பயன்​படுத்​தும் இந்​தச் செயலி, பார்​வைத்​திறன் சவால் கொண்​ட​வர்​களுக்​குத் தேவைப்​படும் பல்​வேறு வசதி​களைத் தன்​னுள் கொண்​டுள்​ளது.

எழுத்​துகளை​யும் ஆவணங்​களை​யும் வாசித்​தல்

புத்​தகங்​கள், செய்​தித்​தாள்​கள், உணவுப் பட்​டியல், அறி​விப்​புப் பல​கைகள், அச்​சிடப்​பட்ட ஆவணங்​கள் ஆகிய​வற்​றில் உள்ள எழுத்​துகளை இந்​தச் செயலி வாசித்​துக் காட்​டு​கிறது. ஆவணங்​கள், PDF கோப்​பு​கள் ஆகிய​வற்​றோடு குறிப்​பிட்ட சில மொழிகளில் உள்ள கையெழுத்​துப் பிரதி​களை​யும்​கூட அடை​யாளம் காண இது உதவு​கிறது.

நபர்​களை அடை​யாளம் காணுதல்

கேம​ராவைப் பயன்​படுத்​திப் படம் எடுத்து அதில் இருக்​கும் நபர்​களை அடை​யாளம் காணலாம். மேலும் இந்​தச் செயலி, கேம​ராவில் காணப்​படும் நபர்​களின் தோற்​றம், தோராய​மான வயது, முகபாவனைகளைச் செய்​யறிவு மூலம் விவரிக்​கிறது. இருப்​பினும், இவை கணிப்​பு​கள் என்​ப​தால் அனைத்​துச் சூழல்​களி​லும் துல்​லிய​மாக இருப்​ப​தில்லை.

பொருள்​களை​யும் பார்​கோடுகளை​யும் அடை​யாளப்​படுத்​து​தல்

கேம​ராவில் படம் பிடிக்​கப்படும் காட்​சி​யில் உள்ள பொருள்​களை​யும் சூழலை​யும் இந்​தச் செயலி விவரிக்​கிறது. கடைகளில் உள்ள பொருள்​களின் பார்​கோடுகளை ஸ்​கேன் செய்து அவற்​றின் பெயரை​யும் தயாரிப்பு விவரங்​களை அறிய​லாம். பார்​கோடு இருக்​கும் இடத்​தைக் கண்​டறிய ஒலி வழிகாட்​டுதலும் உள்​ளது.

நாணயம், நிறம், வெளிச்ச அளவைக் கண்​டறிதல்

இந்​திய ரூபாய் உள்​ளிட்ட பல்​வேறு நாடுகளின் நாணயத் தாள்​களை அடை​யாளம் கண்டு அவற்​றின் மதிப்​பைத் தெரி​விக்​கிறது. துணிகள் அல்​லது பொருள்​களின் நிறங்​களைக் கண்​டறிவதற்​கும் இந்​தச் செயலியைப் பயன்​படுத்​தலாம். மேலும், சுற்​றுப்​புற வெளிச்​சத்​தின் அளவுக்கு ஏற்ப ஒலி​யின் சுருதியை (Pitch) மாற்​று​வதன் மூலம் அறை​யில் வெளிச்​சம் உள்​ளதா என்​ப​தைப் பயனர்​கள் அறிந்​து​கொள்ள உதவு​கிறது.

கேள்​வி​கள் கேட்​கும் வசதி

‘Ask Seeing AI’ வசதி​யின் மூலம் புகைப்​படங்​கள், ஆவணங்​கள் தொடர்​பான கேள்​வி​களை​யும் கேட்​கலாம். உதா​ரண​மாக, உணவு அட்​ட​வணை​யில் உள்ள இறைச்சி உணவு வகைகள் எவை என்​றும், ரசீதில் குறிப்​பிடப்​பட்​டுள்ள தொகை என்ன என்​ப​தையும் அறிந்​து​கொள்​ளலாம்.

தகவல்​களை மீண்​டும் பார்க்க

இந்​தச் செயலியைப் பயன்​படுத்​திப் பகுப்​பாய்வு செய்த புகைப்​படங்​களை​யும் ஆவணங்​களை​யும் மீண்​டும் பார்க்​கும் வசதி உள்​ளது. குறிப்​பாக ஆண்​டிராய்டு செயலி​யின் அண்​மைய பதிப்​பில், கடந்த 30 நாள்​களில் ஆய்வு செய்​யப்​பட்ட ஒளிப்​படங்​களை​யும் ஆவணங்​களை​யும் ‘History’ வசதி மூலம் மீண்​டும் காணலாம்.

மொழி ஆதரவும் பயன்​பாடும்

iOS, ஆண்​டிராய்டு கரு​வி​களில் கட்​ட​ணமின்​றிக் கிடைக்​கும் இந்​தச் செயலி, பல மொழிகளில் செயல்​படு​கிறது. ஆயினும், தமிழ் உள்​ளிட்ட மொழிகளுக்​கான வசதி​கள் மிகக்​குறைவாகவே உள்​ளன. அத்​துடன், இதி​லிருக்​கும் மேம்​பட்ட செய்​யறிவு சார்ந்த செயல்​பாடுகளுக்கு இணைய இணைப்பு தேவைப்​படக்​கூடும்.

யாருக்​குப் பயன்​படும்?

பார்​வையற்​றோர், குறைந்த பார்​வைத்​திறன் கொண்ட முதி​ய​வர்​கள், சிறப்​புக் கல்வி ஆசி​ரியர்​களுக்கு இந்​தச் செயலி பயனுள்​ள​தாக இருக்​கும். என்​கிறபோதும், சாலை​யைக் கடத்​தல் போன்ற உயிர்ப் பாது​காப்பு தொடர்​பான செயல்​களுக்கு இந்​தச் செயலியை மட்​டுமே நம்பி இருக்​கக் கூடாது.

தொழில்​நுட்ப வளர்ச்​சி​யின் உண்​மையான வெற்றி, மனிதர்​களின் வாழ்க்​கையை மென்​மேலும் மேம்​படுத்​து​வது​தான். அதற்​குச் செய்​யறி​வுச் செயலியான, ‘Microsoft Seeing AI’ மிகச்​சிறந்​ததொரு எடுத்​துக்​காட்​டாக விளங்​கு​கிறது. செயலியைத் தர​விறக்க: https://play.google.com/store/apps/details?id=com.microsoft.seeingai

செய்யறிவு விதி

புதிய AI கரு​வி​கள் குறித்​தும் அவற்​றின் பயன்​பாட்டு விதி​கள் பற்​றியும் தொடர்ந்து படியுங்​கள். தொழில்​நுட்​பத்​தைக் கற்​றுக் கொண்டு, நம்​மைப் புதுப்​பித்​துக் ​கொள்​வது காலத்​தின் கட்​டாயம்.

- மேலும் கற்கலாம்.

- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்​நுட்ப எழுத்​தாளர்.

ஏ.ஐ. விழி​யால் பார்க்கலாம் | எளிதில் கற்கலாம் ஏஐ 28
கற்றலை மேம்படுத்தும் ‘Edpuzzle’ | எளிதில் கற்கலாம் ஏஐ 27

X