வேலை தேடுவோருக்கு... | எளிதில் கற்கலாம் ஏஐ 25

வேலை தேடுவோருக்கு... | எளிதில் கற்கலாம் ஏஐ 25
Updated on: 
2 min read

இன்​றைய போட்டி நிறைந்த வேலை​வாய்ப்​புச் சந்​தையில், வேலைக்கு விண்​ணப்​பிக்​கும்​போது Applicant Tracking Systems (ATS) எனப்​படும் தானியங்கி வடிகட்​டும் மென்​பொருள்​களைத் தாண்​டுவது எளிதல்ல. முறை​யான குறிச்​சொற்​களும் (Keywords), வடிவ​மைப்​பும் இல்​லாத சுய​விவரக்​குறிப்​பு​கள் (Resumes) மனிதர்​களைச் சென்றடைவதற்கு முன்பே எந்​திரங்​களால் நிராகரிக்​கப்​பட்​டுவிடு​கின்​றன.

இந்​தச் சவாலை எதிர்​கொள்​ளும் வித​மாக வடிவ​மைக்​கப்​பட்​டிருக்​கும் செய்​யறி​வுத் தளமான Resume Worded, உல​கெங்​கிலும் உள்ள கோடிக்​கணக்​கான வேலை தேடுவோரால் பெரிதும் விரும்​பப்​படு​கிறது. மிகச்​சிறந்த ஆள்​சேர்ப்​பாளர்​களின் மதிப்​பீட்டு முறைகளைக் கணக்​கில்​கொண்டு உரு​வாக்​கப்​பட்​டுள்ள இந்​தத் தளம், சுய​விவரக்​குறிப்​பையும், லின்க்​டுஇன் விவரங்​களை​யும் உடனடி​யாகப் பகுப்​பாய்வு செய்து மேம்​படுத்த உதவு​கிறது.

உடனடி ரெஸ்​யூம் மதிப்​பீடும் மதிப்​பெண்​களும் (Score My Resume) பயனர்​கள் தங்​கள் ரெஸ்யூமைப் பதிவேற்​றிய​வுடன், இந்​தத் தளம் முப்​ப​துக்​கும் மேற்​பட்ட ஆள்​சேர்ப்​புச் சோதனைகளின் (Recruiter Checks) அடிப்​படை​யில் மதிப்​பெண்​களை வழங்கி, வரி வரியாகத் திருத்த வேண்​டிய பகுதி​களைச் சுட்​டிக்​காட்​டு​கிறது.

‘Auto-Fix’ செய்​யறி​வுத் திருத்​தம்: ரெஸ்யூமில் உள்ள பல​வீனமான வாக்​கியங்​களை மாற்றி, உண்​மையான அனுபவத்​துக்கு ஏற்ப தொழில்​முறைத் தரத்​திலான சக்​திவாய்ந்த வார்த்​தைகளைக் கொண்டு தானாகவே திருத்தி எழுதும் (AI Rewriting) வசதியை இது வழங்​கு​கிறது.

திறன் இலக்​கு​களும் குறிச்​சொற்​களும் (Smart Target & Keyword Matcher)

ஒரு​வர் விண்​ணப்​பிக்க விரும்​பும் நிறு​வனத்​தின் வேலை விவரப் பட்​டியலை இதில் நகலெடுத்து ஒட்​டினால், ரெஸ்யூமில் எந்​தெந்​தக் குறிச்​சொற்​கள் விடு​பட்​டுள்​ளன என்​பதை இது துல்​லிய​மாகக் காட்​டிப் பொருந்​தச் செய்​கிறது.

ஏடிஎஸ்-நட்பு டெம்ப்​ளேட்​டுகள் (ATS-Friendly Templates)

ஸ்கிரீனிங் மென்​பொருள்​கள் (Screening Software) எளிதாகப் படித்​துப் புரிந்து கொள்​ளக்​கூடிய வகை​யில், ஆள்​சேர்ப்​புக் குழு​வின​ரால் அங்​கீகரிக்​கப்​பட்ட பிரத்​யேக ரெஸ்​யூம் டெம்ப்​ளேட்​டுகளை இது வழங்​கு​கிறது.

தொடர்ச்​சி​யான முன்​னேற்​றக்கண்​காணிப்பு (Score Tracking & Iteration)

ரெஸ்யூமில் செய்​யப்​படும் ஒவ்​வொரு மாற்​றத்​துக்​குப் பிறகும் கட்​ட​ணமின்றி மீண்​டும் மீண்​டும் பதிவேற்​றம் செய்து, மதிப்​பெண் 90க்​கும் மேல் உயரு​வதை உறுதிசெய்​யும் வசதி​யும் இதில் உள்​ளது.

லின்க்​டுஇன் சுய​விவர மதிப்​பாய்வு (LinkedIn Review)

ரெஸ்யூமிற்கு அடுத்​த​படி​யாக ஆள்​சேர்ப்​புக் குழு​வினர் பார்க்​கும் லின்க்​டுஇன் பக்​கத்தை மேம்​படுத்த, தலைப்பு முதல் அனுபவம் வரையி​லான அனைத்​துப் பகுதி​களை​யும் எவ்​வாறு கட்​டமைத்து, மேம்​படுத்​து​வது என்​ப​தற்​கான ஆலோ​சனைகளை வழங்​கு​கிறது.

அறி​முகக் கடித உரு​வாக்​கம் (AI Cover Letters)

ஏற்​கெனவே இருக்​கும் மாதி​ரி​களைப் பயன்​படுத்​தாமல், ரெஸ்​யூம், வேலை​வாய்ப்பு விவரங்​கள் ஆகிய​வற்​றைக் கருத்​தில்​கொண்டு தனிப்​பயனாக்​கப்​பட்ட அறி​முகக் கடிதங்​களை (Cover Letters) உரு​வாக்​கவும் இந்​தத் தளம் உதவு​கிறது. மேலும் நூற்​றுக்​கணக்​கான சிறந்த மாதி​ரி​களும் இதில் உள்​ளன.

பிற செய்​யறி​வுக் கரு​வி​களி​லிருந்து இது எவ்​வாறு வேறு​படு​கிறது?

General AI Chatbotகள் பொது​வான ஆலோ​சனைகளை மட்​டுமே தரு​கின்​றன. துல்​லிய​மான ATS ஸ்கேனிங், தனிப்​பயனாக்​கப்​பட்ட நேரடி ரெஸ்​யூம் மதிப்​பெண்​கள் ஆகிய​வற்​றைப் பெறு​வதில் நிறைய சவால்​கள் உளளன. Resume Worded தளமோ தொழில்​முறைத் தர மதிப்​பீடுகள், தானியங்கி திருத்​தங்​கள் மூலம் நேர்​காணல் வாய்ப்​பு​களை பலமடங்கு அதி​கரிக்க உதவு​கிறது.

யாருக்கு இது மிகவும் பயன்​படும்?

வேலை தேடும் பட்​ட​தா​ரி​கள், வேலை மாறு​வோர், மூத்த தொழில் வல்​லுநர்​கள், சர்​வ​தேச நிறு​வனங்​களில் வேலை​வாய்ப்​பைத் தேடும் அனைவருக்​கும் இந்​தக் கருவி உதவக்​கூடும். தொழில்​முறை ஆவணங்​களைச் செம்​மைப்​படுத்தி, நேர்​காணல் அழைப்​பு​களைப் பெறு​வதை எளிதாக்​கு​வதில் Resume Worded முக்​கியப் பங்கு வகிக்​கிறது.

https://resumeworded.com//

செய்யறிவு விதி: தேர்​வு​கள், போட்​டிகளில் அனுமதிக்​கப்​பட்​டால் மட்​டுமே செய்​யறிவைப் பயன்​படுத்​துங்​கள். தவறான வழி​யில் செய்​யறிவைப் பயன்​படுத்தி வெற்றி பெற நினைக்​காதீர்​கள். நேர்​மையான முயற்​சியே நிரந்​தர வெற்றியைக் கொடுக்கும்.

- மேலும் கற்கலாம்.

- கட்டுரையாளர், பேராசிரியர்,

தொழில்​நுட்ப எழுத்​தாளர்.

வேலை தேடுவோருக்கு... | எளிதில் கற்கலாம் ஏஐ 25
வீட்டு உள் அலங்காரத்தை நாமே வடிவமைக்கலாம் | எளிதில் கற்கலாம் ஏஐ 24

X