Lava Bold 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

லாவா போல்ட் 2 போன்

லாவா போல்ட் 2 போன்

Updated on
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா போல்ட் 2 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.

அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா போல்ட் 2 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. லாவா போல்ட் போன் கடந்த ஆண்டு அறிமுகமாகி இருந்தது. இந்நிலையில், தற்போது அதன் அடுத்த மாடல் போன் வெளிவந்துள்ளது. இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. கேமரா, பேட்டரி என இந்த போனின் அம்சங்கள் கவனம் ஈர்க்கிறது.

லாவா போல்ட் 2 போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே

  • மீடியாடெக் டிமான்சிட்டி 7060 ப்ராஸசர்

  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்

  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா

  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா

  • 5,000mAh பேட்டரி

  • 33 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் அம்சம்

  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்

  • 5ஜி நெட்வொர்க்

  • 6ஜிபி ரேம்

  • 128ஜிபி ஸ்டோரேஜ்

  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்

  • இந்த போனின் விலை ரூ.12,999

<div class="paragraphs"><p>லாவா போல்ட் 2 போன்</p></div>
Nothing Phone (4a) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in