

நத்திங் போன் (4a) ஸ்மார்ட்போன்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நத்திங் போன் (4a) அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட் விற்பனை மூலம் சந்தையில் களம் கண்டது. தொடர்ந்து ஸ்மார்ட்போன் விற்பனையை 2022-ல் தொடங்கியது. இது ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
அந்நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான கார்ல் பெய் (Carl Pei) தான் இந்த வரவேற்புக்கு காரணம். இவர் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக செயல்பட்டவர். பின்னர் கடந்த 2021-ல் நத்திங் நிறுவனத்தை தொடங்கினார். இந்நிலையில், தற்போது நத்திங் போன் (4a) ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனுடன் நத்திங் போன் (4a) புரோ மாடலும் சந்தையில் அறிமுகமாகி உள்ளது.
நத்திங் போன் (4a) சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே
ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜெனரேஷன் 4 சிப்செட்
50 + 8 + 50 மெகாபிக்சல் என மூன்று கேமரா பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது
32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
இந்தியாவில் 5,400mAh பேட்டரி உடன் இந்த போன் வெளிவந்துள்ளது
50 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்
8ஜிபி / 12ஜிபி ரேம்
128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்
5ஜி நெட்வொர்க்
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
பிங்க், நீலம், கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இந்த போன் வெளிவந்துள்ளது
இந்த போனின் விலை ரூ.31,999 முதல் தொடங்குகிறது