Published : 05 Dec 2022 09:47 AM
Last Updated : 05 Dec 2022 09:47 AM

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பை கண்டறியலாம்

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி: உலகம் முழுவதும் மனிதர்களின் எதிர்பாராத உயிரிழப்புக்கு மாரடைப்பு முக்கிய காரணம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மாரடைப்பை முன்கூட்டியே அறிவதற்கான ஆராய்ச்சிகளில் இத்துறை சார்ந்த வர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் விளைவாக, ஒரே ஒரு எக்ஸ்-ரே மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பதை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) மூலம் 10 ஆண்டுக்கு முன்பே அறிய முடியும் என அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் நிறுவன ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மார்பக எக்ஸ்-ரே எடுத்த பிறகு, மாரடைப்பை தடுப்பதற்காக ஸ்டேட்டின் தெரபி (கெட்ட கொழுப்பை குறைப்பது) தேவைப்படும் 11,430 வெளிப்புற நோயாளிகளின் மருத்துவ குறிப்புகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர்.

இவர்களின் எக்ஸ்-ரே, புதியநோயாளிகளின் எக்ஸ்-ரேவுடன்ஒப்பிட்டு, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x