Last Updated : 08 May, 2014 10:54 AM

 

Published : 08 May 2014 10:54 AM
Last Updated : 08 May 2014 10:54 AM

நாளைய உலகம்: 100 மில்லியன் போலிகள்

பேஸ்புக் சமூக வலைதள நிறுவனம் கடந்த மாதம் ஒரு முக்கிய கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. மார்ச் 31-ம் தேதி வரை எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பின்படி உலகம் முழுவ தும் 1.28 பில்லியன் பேர் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகிறார்கள். அதில் 15 சதவீதம் பேர் போலியானவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் பேஸ்புக்கின் முக்கிய வியாபார சந்தையான இந்தியா மற்றும் துருக்கியில்தான் அதிக போலி கணக்குகள் உள்ளதாம்.

வேகத்துக்கு ஒரு மைக்ரோசிப்

பெர்சனல் கம்ப்யூட்டர் எனப்படும் பி.சி கணினிகளை வைத்திருப்பவர் களுக்கு பெரிய பிரச்சினை அதன் வேகம் குறைவாக இருப்பதுதான். இதனால் அந்த வகை கம்ப்யூட்டர்களை கைவிட தொடங்கிய மக்கள் இப்போது ஸ்மார்ட்போன் பக்கம் தலைசாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.

உலகின் பெரும்பாலான PC கணினி களுக்கு மைக்ரோசாப்டின் விண்டோஸ் நிறுவனம்தான் இயங்குதள சேவையை வழங்கி வருகிறது. எனவே இவற்றின் வேகத்தை அதிகப்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் மைக்ரோசிப் என்னும் புதிய கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வேகம் மற்ற சிப்களின் வேகத்தைவிட 9000 மடங்கு அதிகமாகும். இந்த சிப்புகள் விரைவில் சந்தைக்கு வரவுள்ளன.

புதிய வசதி!

குறுந்தகவல்களை பரிமாறிக்கொள்ள சீன மென்பொருள் நிறுவனம் ஒன்று வீ சாட் அப்ளிகேஷனை உருவாக்கியது. இதில் ஆரம்பத்தில் 100 மில்லியன் பயனர்கள் கணக்கினை தொடங்கினார்கள். ஆனால் ஸ்மார்ட்போன் பயனர்களோ வீ-சாட்டை விட வாட்ஸ் அப் அப்ளிகேஷனைத்தான் அதிகளவில் விரும்புகிறார்கள். எனவே வீ-சாட் நிறுவனம் பயனர்களை தங்கள் பக்கம் கவர்ந்திழுப்பதற்காக வீ-சாட் கிளவுட் ஸ்டோரேஜ் வசதியை ஏற்படுத்தியுள்ளது. கோப்புகளை இணையவெளியில் சேகரித்து வைத்து கொள்வதுதான் இந்த வசதி. மேகக்கணினி முறைப்படி 1 ஜிபி வரையிலான கோப்புகள், பாடல்கள், புகைப்படங்களை ஒருவர் இந்த அப்ளிகேஷனில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.

தேடிய பொருளை பெறலாம்

கூகுள் நிறுவனம் தனது தேடுபொறியை சீரான இடைவெளி களுக்கு நடுவே தொடர்ச்சியாக மேம்படுத்தி வருகிறது. அதன்படி கடைசியாக தனது மேம்படுத்துதல் வேலையை கடந்த மே 2-ம் தேதி செய்துள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட கூகுள் இணையதளம் யாருக்கு கைகொடுக்கிறதோ இல்லையோ ஷாப்பிங் பிரியர்களுக்கு ரொம்பவே கைகொடுக்கும்.

இதன்படி கூகுள் தேடுபொறியில் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று தேடினால், அந்த பொருள் எந்த இடத்தில் கிடைக்கும், எந்த கடையில் எவ்வளவு விலை என்பதைப் போன்ற முக்கியமான எல்லா விவரங்களையும் துள்ளியமாக தெரிந்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x