குவைத் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் இளைஞர் உயிரிழப்பு

உடலை சொந்த ஊர் கொண்டு வர மனைவி மனு
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த சந்தான செல்வத்தின் மனைவி கவுசல்யா மற்றும் உறவினர்கள். (உள்படம்) சந்தான செல்வம்

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த சந்தான செல்வத்தின் மனைவி கவுசல்யா மற்றும் உறவினர்கள். (உள்படம்) சந்தான செல்வம்

Updated on
1 min read

ராமநாதபுரம்: ஈ​ரான் தாக்​குதலில் குவைத் நாட்​டில் பணிபுரிந்த ராம​நாத​புரம் இளைஞர் உயி​ரிழந்​தார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்​டும் என அவரது மனைவி ராம​நாத​புரம் ஆட்​சி​யரிடம் மனு அளித்​தார்.

ராம​நாத​புரம் மாவட்​டம் முதுகுளத்​தூர் தாலுகா அணி​குருந்​தான் கிராமத்​தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சந்​தான செல்​வம்​(36). இவர் நேற்று முன்​தினம் இரவு குவைத் மீது ஈரான் நடத்​திய தாக்​குதலில் உயி​ரிழந்​தார்.

குவைத் நாட்​டில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மற்​றும் கடல்​நீரை குடிநீ​ராக்​கும் திட்​டம், மின் உற்​பத்தி நிலையங்​கள் மீது நேற்று முன்தினம் இரவு ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்​தி​யுள்ளது.

இதில் அங்​குள்ள ஒரு நிறு​வனத்​தில் ஒப்​பந்த பணி​யாள​ராக பணிபுரிந்த சந்​தான செல்​வம் உயி​ரிழந்​தார். இதுகுறித்து இந்​திய தூதரகம் மூலம் அவரது குடும்​பத்​துக்கு நேற்று காலை தகவல் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் சந்​தான செல்​வத்​தின் மனைவி கவுசல்​யா, தனது மகன் ஜஸ்​வின்​ (7), மகள் சாய் யுவன்​யா (3) மற்​றும் உறவினர்​கள், கிராம மக்​களு​டன் ராம​நாத​புரம் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​துக்கு நேற்று வந்​தார்.

அங்கு ஆட்​சி​யர் சிம்​ரன்ஜீத் சிங் காலோனை சந்​தித்​து, குவைத் நாட்​டில் இறந்த தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவும், தனது குடும்ப வாழ்​வா​தா​ரத்​துக்​கும், குழந்​தைகளை படிக்க வைக்​க​வும் நிதி​யுதவி அளிக்க வேண்​டும் என்றும் கண்​ணீர் மல்க மனு அளித்​தார்.

மேலும் ராம​நாத​புரம் எம்பி நவாஸ்​கனி அலு​வல​கத்​தி​லும் மனு அளித்​தனர். இதுகுறித்து கவுசல்யா கூறிய​தாவது: எனது கணவர் கடந்த 10 ஆண்​டு​களுக்​கும் மேலாக ஒப்​பந்த தொழிலா​ளி​யாக குவைத் நாட்​டில் பணிபுரிந்து வந்​தார்.

நேற்று முன்​தினம் இரவு என்​னிடம் பேசி​னார். அதன்​பின்​னர் அவரை தொடர்பு கொள்ள முடிய​வில்​லை. அவரது செல்போன் அணைத்து வைக்​கப்​பட்​ட​தாக தகவல் வந்​தது. இன்று (நேற்​று) காலை​யில் அவர் இறந்​து​விட்​ட​தாக இந்​தியதூதரக அதி​காரி​கள் தகவல் தெரி​வித்​தனர்.

இதனால் நானும் எனது குழந்​தைகளும் துயரத்​தில் இருக்​கிறோம். எனது கணவரின் உடலை நல்​லடக்​கம் செய்ய வேண்​டும்.

எனவே மத்​திய, மாநில அரசுகள் எனது கணவர் உடலை சொந்த ஊர் கொண்​டுவர நடவடிக்கை எடுக்க வேண்​டும். மேலும் எனது குடும்​பத்​துக்கு நிதி​யுதவி அளிக்க வேண்​டும். இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த சந்தான செல்வத்தின் மனைவி கவுசல்யா மற்றும் உறவினர்கள். (உள்படம்) சந்தான செல்வம்</p></div>
புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களில் 119 பேர் கோடீஸ்வரர்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in