இன்னொரு அறிவொளி இயக்கத்தை நடத்த வேண்டும்: எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் வலியுறுத்தல்

சிவகாசியில் நேற்று ெதாடங்கிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 23-வது மாநில மாநாட்டில், காந்தியடிகள் நினைவுநாளை முன்னிட்டு வன்முறை ஒழிப்பு உறுதிமொழி  ஏற்றுக்கொண்ட விருதுநகர் மாவட்ட ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா மற்றும் அறிவியல் இயக்க நிர்வாகிகள்.

சிவகாசியில் நேற்று ெதாடங்கிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 23-வது மாநில மாநாட்டில், காந்தியடிகள் நினைவுநாளை முன்னிட்டு வன்முறை ஒழிப்பு உறுதிமொழி  ஏற்றுக்கொண்ட விருதுநகர் மாவட்ட ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா மற்றும் அறிவியல் இயக்க நிர்வாகிகள்.

Updated on
1 min read

சிவ​காசி: ‘சமூக மாற்​றத்தை உரு​வாக்​கும் வகை​யில் இன்​னொரு அறிவொளி இயக்​கத்தை நடத்த வேண்​டும்’ என்று அறி​வியல் இயக்க மாநாட்​டில் எழுத்​தாளர் ச.தமிழ்ச்​செல்​வன் வலி​யுறுத்​தி​னார். தமிழ்​நாடு அறி​வியல் இயக்​கத்​தின் 23-வது மாநில மாநாடு சிவ​காசி ஸ்ரீகாளீஸ்​வரி கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​யில் நேற்று தொடங்​கியது.

இம்​மா​நாடு 3 நாட்​கள் நடை​பெறுகிறது. வரவேற்​புக் குழுத் தலை​வர் பி.ர​வீந்​திரன் தலை​மை​யில் நடை​பெற்ற விழா​வில், விருதுநகர் மாவட்ட ஆட்​சி​யர் என்​.ஓ.சுகபுத்ரா மாநாட்​டைத் தொடங்கி வைத்​தார்.

மாநாட்​டில் அவர் பேசும்​போது, “பள்ளி மாணவர்​களிடையே அறி​வியல் கல்​வியைக் கொண்டு செல்​வ​தில் அறி​வியல் இயக்​கத் தொண்​டர்​களின் பணி மிக​வும் பாராட்​டத்​தக்​கது. விருதுநகர் மாவட்​டத்​தில், கல்​விப் பணி​களில் அறிவியல் இயக்​கத்​துக்​குத் தேவை​யான உதவி​களை செய்ய மாவட்ட நிர்​வாகம் எப்​போதும் தயா​ராக இருக்​கிறது” என்​றார்.

அதைத்​தொடர்ந்து எழுத்​தாளர் ச.தமிழ்ச்​செல்​வன் பேசி​ய​தாவது: ஆதி​மனிதன் ஆப்​பிரிக்​கா​வில்​தான் தோன்​றி​னான் என்​பதும், அங்​கிருந்​து​தான் உலகம் முழு​வதற்​கும் மனிதகுல பரவல் நடை​பெற்​றது என்​பதும் அறி​வியல்​ரீ​தி​யாக நிரூபணம் செய்​யப்​பட்ட உண்​மை. இந்த உண்​மைக்​குப் புறம்​பாக, வேத கதைகளில் சொல்​லப்​படு​வதை எல்​லாம் வரலாறாக மாற்​றும் முயற்​சிகள் இப்​போது நடை​பெறுகின்​றன.

அறிவியல் மனப்பான்மை: இத்​தகைய சூழலில், உண்​மை​யான அறி​வியலை மக்​களிடம் நாம்​தான் கொண்​டு​செல்ல வேண்​டும். முன் எப்​போதை​யும்​ விட மக்​களிடம் அறி​வியல் கண்​ணோட்​டத்தை வளர்த்​து, அறி​வியல் மனப்​பான்மை கொண்ட சமூகத்தை உரு​வாக்​கு​வதற்​கான கடமை நமக்கு இருக்​கிறது.

தமிழ்​நாட்​டில் அறிவொளி இயக்​க காலத்​தில் பல மாற்​றங்​கள் ஏற்​படுத்​தப்​பட்​டன. எனவே, இன்​னொரு அறிவொளி இயக்​கத்தை தமிழ்​நாட்​டில் நடத்த வேண்​டும். அதற்​கான திட்​டங்​கள் பற்​றி, தமிழ்​நாடு அறி​வியல் இயக்​கத்​தின் மாநில மாநாடு விவா​திக்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

கணித அறி​வியல் விஞ்​ஞானி ஆர்​.​ரா​மானுஜம் பேசும்​போது, “சுற்​றுப்​புறச் சூழலை பாது​காப்​ப​தற்​காகவே இந்​தி​யா​வில் முதலில் மக்​கள் அறி​வியல் இயக்​கங்​கள் தோற்​று​விக்​கப்​பட்​டன. இன்​றைக்​கும் சூழலியல் சார்ந்த பல பிரச்​சினை​கள் நம் முன்னே இருக்​கின்​றன.

காற்று மாசு, நீர் மாசு பெரு​கி​யுள்​ளது. இது​போன்ற பிரச்​சினை​களுக்​கான காரணங்​கள் பற்றி நாம் மக்​களிடம் பேச வேண்​டும். அதற்​கான பணி​களை அறி​வியல் இயக்​கம் செய்ய வேண்​டும்” என்​றார்.

மாநாட்​டில் மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர் முனை​வர் கு.அர​விந்​தன், அறி​வியல் இயக்​கத்​தின் மூத்த நிர்​வாகி​கள் டி.​தாமஸ் பிராங்​கோ, பி.​ராஜ​மாணிக்​கம் உள்​ளிட்ட பலர் உரை​யாற்​றினர்.

அறி​வியல் இயக்க மாநில நிர்​வாகி​கள் த.திரு​நாவுக்​கரசு, எம்​.எஸ். முகமதுபாதுஷா, எஸ்​.சு​தாகர் உள்​ளிட்ட பலர் பங்​கேற்​றனர். முன்​ன​தாக, மகாத்மா காந்​தி​யடிகள் நினைவு தினத்தை முன்​னிட்டு அனை​வரும் வன்​முறை ஒழிப்பு உறு​தி​மொழி ஏற்​றுக்​கொண்​டனர்.

<div class="paragraphs"><p>சிவகாசியில் நேற்று ெதாடங்கிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 23-வது மாநில மாநாட்டில், காந்தியடிகள் நினைவுநாளை முன்னிட்டு வன்முறை ஒழிப்பு உறுதிமொழி&nbsp; ஏற்றுக்கொண்ட விருதுநகர் மாவட்ட ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா மற்றும் அறிவியல் இயக்க நிர்வாகிகள். </p></div>
பழநி தைப்பூச திருவிழாவில் இன்று திருக்கல்யாணம்: நாளை மாலை தேரோட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in