பழநி தைப்பூச திருவிழாவில் இன்று திருக்கல்யாணம்: நாளை மாலை தேரோட்டம்

பழநியில் தைப்பூசத்தை முன்னிட்டு காவடி எடுத்து வந்து ஆடிப்பாடி மகிழ்ந்த பக்தர்கள்.

பழநியில் தைப்பூசத்தை முன்னிட்டு காவடி எடுத்து வந்து ஆடிப்பாடி மகிழ்ந்த பக்தர்கள்.

Updated on
1 min read

பழநி: பழநியில் தைப்​பூசத் திரு​விழா​வின் 6-ம் நாளான இன்று (ஜன.31) திருக்​கல்​யாண உற்​சவம் நடை​பெறுகிறது. முக்​கிய விழா​வான தைப்​பூசத் தேரோட்​டம் நாளை (பிப்​.1) மாலை நடை​பெறுகிறது.

பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயி​லின் உபகோயி​லான பெரிய​நாயகி​யம்​மன் கோயி​லில் தைப்​பூசத் திரு​விழா ஜன.26-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்கி நடை​பெற்று வரு​கிறது.

தின​மும் வள்​ளி, தெய்​வானை சமேத முத்​துக்​கு​மார சுவாமி ரத வீதி​களில் தங்க மயில், வெள்ளி மயில், ஆட்​டுக்​கி​டா, காமதேனு உள்​ளிட்ட வாக​னங்​களில் வீதி​யுலா வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தனர். விழா​வின் 6-ம் நாளான இன்று (ஜன.31) இரவு 7 மணிக்கு மேல் திருக்​கல்​யாணம் நடை​பெற உள்​ளது.

இரவு 9 மணிக்கு மேல் சுவாமி மணக்​கோலத்​தில் வெள்​ளித்​தேரில் ரத வீதி​களில் உலா வந்து பக்​தர்​களுக்கு காட்சி அளிக்​கிறார். விழா​வின் முக்​கிய நிகழ்​வாக தைப்​பூச தின​மான நாளை (பிப்​.1) மாலை தேரோட்​டம் நடை​பெறுகிறது.

முன்​ன​தாக, காலை 5 மணிக்கு மேல் முத்​துக்​கு​மார சுவாமி தோளுக்​கினி​யானில் சண்​முகந​திக்கு எழுந்​தருள் கிறார். காலை 11.15 மணிக்கு மேல் தேரேற்​றம் நடை​பெறுகிறது.

இதைத் தொடர்ந்​து, மாலை 4 மணிக்கு மேல் ரத வீதி​களில் தேரோட்​டம் நடை​பெறும். பிப்​ர​வரி 4-ம் தேதி காலை 9 மணிக்கு திரு​வூடல் நிகழ்ச்​சி​யும், இரவு 7 மணிக்கு மேல் தெப்​பத் திரு​விழா​வும் நடை​பெறும்.

அன்று இரவு 11 மணிக்கு மேல் கொடி இறக்​கத்​துடன் விழா நிறைவு பெறுகிறது. இதையொட்​டி, பழநியில் 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்​.

<div class="paragraphs"><p>பழநியில் தைப்பூசத்தை முன்னிட்டு காவடி எடுத்து வந்து ஆடிப்பாடி மகிழ்ந்த பக்தர்கள். </p></div>
சிவகாசியில் நில அதிர்வால் பாதிப்பில்லை: ஆட்சியர் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in