இலவச பயணத் திட்டப் பேருந்துகளில் தமிழகம் முழுவதும் ‘விடியல்’ வார்த்தை நீக்கம்

‘மகளிர் பயணம்’ என மாற்றம்
| படம்: எஸ்.சத்தியசீலன் |

| படம்: எஸ்.சத்தியசீலன் |

Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் மகளிர் இலவச பயணத் திட்​டப் பேருந்​துகளில் ‘விடியல்’ என்ற வார்த்தை நீக்​கப்​பட்​டு, ‘மகளிர் பயணம்’ என்று மாற்​றப்​பட்​டுள்​ளது.

கடந்த திமுக ஆட்​சி​யில் முதல்​வ​ராக ஸ்டா​லின் 2021 மே 7-ம் தேதி பதவி​யேற்​றவுடன், நகரப் பேருந்​துகளில் பெண்​கள் இலவச​மாக பயணம் செய்​யும் திட்​டத்தை அறி​முகம் செய்​தார்.

அரசுப் போக்​கு​வரத்​துக் கழகங்​களில் இயக்​கப்​படும் 9,000 நகரப் பேருந்​துகளில் 7,200-க்​கும்மேற்​பட்ட சாதாரண கட்​ட​ணப் பேருந்​துகளில் இத்​திட்​டம் அமல்​படுத்​தப்​பட்​டது.

இதன்​படி, சென்​னை​யில் 1,559 சாதாரண கட்​ட​ணப் பேருந்​து களில் பெண்​கள் இலவச​மாக பயணம் செய்​கின்​றனர். நகர்ப்​புறங்​களில் வெள்ளை போர்டு கொண்ட பேருந்​துகளி​லும், கிராமப்​புறங்​களில் நகரப் பேருந்​துகளி​லும் இத்​திட்​டம் செயல்​படுத்​தப்​படு​கிறது.

எண்ணிக்கை 62% உயர்வு

இதற்கு பெண்​களிடம் வரவேற்பு கிடைத்​ததை அடுத்​து, திருநங்​கைகள், மாற்​றுத் திற​னாளி​களுக்​கும் இத்​திட்​டம் விரிவுபடுத்​தப்​பட்​டது. இதனால், அரசுப் பேருந்​துகளில் பயணம் செய்​யும் பெண்​களின் எண்​ணிக்​கை​யும் 62 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது.

இந்த பேருந்​துகளை எளி​தில் அடை​யாளம் காணும் வகை​யில், ‘மகளிர் விடியல் பயணம்’ என்று பெயரிட்​டு, பேருந்​துகளின் முன்​னும், பின்​னும் பலகை அல்​லது டிஜிட்​டல் பலகை இடம்​பெற்​றன.

தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டு, தவெக அரசு பொறுப்​பேற்ற பிறகு, போக்​கு​வரத்து துறை​யில் பல மாற்​றங்​கள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. அதன் ஒரு பகு​தி​யாக, மகளிர் பயணம் திட்​டத்தை அனைத்து அரசுப் பேருந்​துகளி​லும் விரி​வாக்​கம் செய்ய செயல் திட்​டம் உரு​வாக்​கப்​பட்டு வரு​கிறது.

இந்த நிலை​யில், மகளிர் இலவச பயணத் திட்ட பேருந்​துகளில், ‘விடியல்’ என்ற வார்த்தை நீக்​கப்​பட்​டு, ‘மகளிர் பயணம்’ என்று மாற்​றப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் இயக்​கப்​படும் அனைத்து நகரப் பேருந்​துகளி​லும், உடனடி​யாக பெயர் மாற்​றம் செய்​யு​மாறு போக்​கு​வரத்து கிளை மேலா​ளர்​களுக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து போக்​கு​வரத்து துறை அமைச்​சர் விஜய் தமிழன் பார்த்​திபனிடம் செய்​தி​யாளர்​கள் கேட்​ட​போது, “இது மகளிருக்​கான பயணம். எனவே, மகளிர் பயணம் என்று பெயரிடப்​பட்​டுள்​ளது” என்​றார். நிர்​வாகத்​தின் இந்த முடி​வால், பயணி​கள் சேவை​யில் எந்த பாதிப்​பும் இருக்​காது என்று போக்​கு​வரத்​துக் கழக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

<div class="paragraphs"><p>| படம்: எஸ்.சத்தியசீலன் |</p></div>
எம்எல்ஏ.வுக்கு ரூ.35 கோடி பேரம்: சிங்கப்பூர் நபருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in