“ஒரு தீர்ப்பை அமல்படுத்தாவிடில் அரசை கலைப்பீர்களா?” - பெ.சண்முகம் கேள்வி

பெ.சண்முகம்

பெ.சண்முகம்

Updated on: 
1 min read

விருதுநகர்: இந்​திய அரசி​யல் அமைப்​புச் சட்​டம் ஏற்​கப்​பட்ட தினத்​தை​யொட்டி, மார்க்சிஸ்ட் கட்சி சார்​பில் விருதுநகர் தேசபந்து திடலில் வாக்​குரிமை பாது​காப்பு உறுதி​யேற்பு நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது.

இதில் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் சண்​முகம் பேசிய​தாவது: திருப்​பரங்​குன்​றம் கோயில், அதன் நிலம் தொடர்​பான வழக்கு, தீபம் ஏற்​றும் வழக்கு போன்ற வில்​லங்​க​மான அனைத்​தும் எப்​படி நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதனிடம் மட்​டுமே விசா​ரணைக்கு வரு​கின்​றன? இவரே விரும்​பிக் கேட்டு வாங்​கு​கிறாரா? விரும்​பிக் கேட்​டாலும் தலைமை நீதிபதி எப்​படி இதுபோன்ற வழக்​கு​களை ஒரு​வரிடமே ஒப்​படைக்க முடியும்? இதை தமிழக மக்​களுக்கு தலைமை நீதிபதி தெளிவுபடுத்த வேண்​டும்.

ஒரு கோயி​லில் உச்ச நீதி​மன்ற தீர்ப்பை அமல்​படுத்​த​வில்லை என்​றால் அற்​காக தமிழக அரசை கலைப்​பீர்​களா? காவி​ரி​யில் 13 டிஎம்சி தண்​ணீர் வழங்க வேண்​டும் என்று தீர்ப்​பளித்து 13 ஆண்​டுகள் ஆகி​விட்​டன. இது​வரை அந்​தத் தீர்ப்பை கர்​நாடக அரசு அமல்​படுத்​த​வில்லை. இதுபோன்ற வழக்​கு​களை பட்​டியலிட்​டால் உச்ச நீதி​மன்​றம் தலை​யில் கைவைத்​துக் கொண்​டுதான் செல்ல வேண்​டும்.

தீர்ப்பு வழங்​கும் இடத்​தில் அவர்​கள் இருக்​கிறார்​கள். அமல்​படுத்த வேண்​டிய​வர்​கள் அமல்​படுத்​தாத​போது அதை அமல்​படுத்த வற்​புறுத்த வேண்​டுமே தவிர, ஆட்​சி​யைக் கலைக்​கும் நட​வடிக்​கைக்கு செல்ல முடியுமா? இவ்​வாறு அவர் பேசினார்.

<div class="paragraphs"><p>பெ.சண்முகம்</p></div>
தமிழக அரசு ஆண் பணியாளர்களுக்கு 15 நாட்கள் தந்தையர் மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு

X