மகளிருக்கு ரூ.2,500 வழங்குவது எப்போது? -​​ அமைச்சர் விளக்கம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

நாகப்பட்டினம்: மகளிர் உரிமைத் தொகை​யாக மாதம் ரூ.2,500 வழங்​கு​வது எப்போது என நிதி அமைச்​சர் மரிய வில்​சன் பதில் அளித்​துள்​ளார்.

வேளாங்​கண்ணி புனித ஆரோக்​கிய மாதா பேரால​யத்​தில் வழி​பாடு நடத்​து​வதற்​காக தமிழக நிதி அமைச்​சர் மரிய வில்​சன் நேற்று வந்​திருந்​தார். அப்​போது அவர் பேரால​யத்​தில் பிரார்த்​தனை செய்​தார்.

பின்​னர் செய்​தி​யாளர்களிடம் கூறியது: தமிழகத்​தின் நிதி​நிலை குறித்து இன்​னும் 2 வாரங்​களில் வெள்ளை அறிக்கை வெளி​யிடப்பட உள்​ளது. மதுரை மாநக​ராட்​சி​ ஊழல் தொடர்​பாக முழு அறிக்கை கேட்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல, அனைத்து தணிக்கை அறிக்​கைகளும் கேட்​கப்​பட்​டுள்​ளன. மகளிர் உரிமைத் தொகை வட மாநில பெண்​களுக்​கும் வழங்​கப்​பட்டு வரு​வ​தாகத் தெரி​கிறது. எனவே, இதுதொடர்​பாக உரிய விசா​ரணை நடத்த உத்​தர​விடப்பட்​டுள்​ளது. மகளிர் உரிமைத் தொகையை மாதம் ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்​கு​வது தொடர்​பாக பட்​ஜெட்டில் தெரிவிக்​கப்​படும்.

கடந்த 2024-ல் பயிர்க்கடன் தள்​ளு​படி தொடர்​பாக ரிசர்வ் வங்கி சில விதி​முறை​களை வெளி​யிட்​டுள்​ளது. கடந்த திமுக ஆட்சி காலத்​தின்​போது இத்​தகைய விதி​முறை​கள் எது​வும் இல்​லை. எனவே ரிசர்வ் வங்​கி​யின் விதி​களை பின்​பற்​றித் தான் விவ​சாயக் கடன் தள்​ளு​படி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து தொடர்ந்து ஆலோ​சனை நடை​பெற்று வரு​கிறது. இந்​தியா ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்​டு​மா​னாலும் எந்​தக் கட்​சி​யில் வேண்​டு​மா​னாலும் இணைவதற்கு முழு உரிமை​யும் அவர்​களுக்கு உண்​டு. இவ்​வாறு அமைச்​சர் மரிய வில்​சன் தெரி​வித்​தார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
அஜித் தாயார் மறைவு: முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in