

டாஸ்மாக் | கோப்புப் படம்
சென்னை: ‘டாஸ்மாக் நிறுவனம் பற்றிய உண்மை தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ள கூடாதா? உங்கள் ஆட்சியிலும் பாட்டிலுக்கு 20 ரூபாய் வாங்குவதாக வரும் குற்றச்சாட்டுக்கு எப்போது பதில் வரும்?’ என முதல்வர் விஜய்க்கு அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து அதிமுக ஐடி விங்க் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘டாஸ்மாக்கில் எத்தனை கடைகள் இருக்கிறது என்று சொல்லக் கூட முடியாத இன்றைய அரசு, எப்படி வெளிப்படைத் தன்மையாக இருக்கும் என மக்கள் நம்புவார்கள்?
டாஸ்மாக் நிறுவனம் பற்றிய உண்மைத் தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ள கூடாதா? பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று பாட்டெல்லாம் பாடி, அன்று 41 உயிர்கள் போனது எல்லாம் நினைவில் இல்லையா முதல்வர் விஜய்?
இப்போது உங்கள் ஆட்சியிலும் பாட்டிலுக்கு 20 ரூபாய் வாங்குவதாக வரும் குற்றச்சாட்டுக்கு எப்போது பதில் வரும்?’ என வினவப்பட்டுள்ளது.