

தேர்தல் அறிக்கை தயாரிக்க, பொதுமக்கள் தங்களது பரிந்துரைகளை வழங்குவதற்கு வசியாக தவெக சார்பில் https://tvkmanifesto2026.com என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் நுழைந்ததும், “நம் காலம் வருகிறது. வளமான தமிழகம், நலமான மக்கள், பாதுகாப்பான எதிர்காலம் என்ற பயணத்தில் பங்கேற்போம்” என முழக்கம் வெளிப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பரிந்துரைகளை வழங்க பொதுமக்களுக்கு தவெக தலைவர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். அதில், “இந்த தேர்தலில் நமது வெற்றி தமிழகத்தின் வெற்றி. அத்தகைய வெற்றிக்காக உங்கள் பார்வைகளையும், பரிந்துரைகளையும் வழங்குமாறு அன்புடன் அழைக்கிறேன்” என தெரிவித்துள்ளார். tvkmanifesto2026@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.