ஏப்.30 முதல் மே 2 வரை நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

ஏப்.30 முதல் மே 2 வரை நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் மே 2-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்.30 முதல் மே 2 வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய பிரதேசத்தின் மத்திய பகுதிகள் முதல் குமரிக் கடல் வரை விதர்பா, உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக, சுமார் 900 மீட்டர் உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக நாளை (ஏப்.28) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்.30 முதல் மே 2-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 3-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் 30-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், மே 1, 2 தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் மே 1-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்.30 முதல் மே 2 வரை நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
“பாஜகவை மேற்கு வங்க மக்கள் பழிவாங்குவர்” - கொல்கத்தாவில் கேஜ்ரிவால் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in