“பாஜகவை மேற்கு வங்க மக்கள் பழிவாங்குவர்” - கொல்கத்தாவில் கேஜ்ரிவால் கருத்து

கேஜ்ரிவால்

கேஜ்ரிவால்

Updated on
1 min read

புதுடெல்லி: “எஸ்ஐஆர் (SIR) செயல்முறையின் போது, மேற்கு வங்கத்தில் இருந்து 90 லட்சம் வாக்குகளை நீக்கியதற்காக, பாஜகவை மக்கள் பழிவாங்குவார்கள்” என ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் தேர்தல் களம் தீவிரமடைந்துள்ளது. தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும். தேர்தலின் முதல் கட்டத்தில் 93.2% வாக்குப் பதிவு பதிவாகியுள்ளது.

இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், “நடைபெறவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற மம்தா பானர்ஜிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

சர்வாதிகாரத்துக்கு எதிராக மேற்கு வங்க மக்கள் போராடி வரும் விதத்துக்காக நான் அவர்களைப் பாராட்டுகிறேன். கடந்த இரண்டு நாட்களில் மாநிலத்தில் நான் கண்ட சூழலைப் பார்க்கும்போது, ​​எஸ்ஐஆர் (SIR) செயல்முறையின் போது, மேற்கு வங்கத்தில் இருந்து 90 லட்சம் வாக்குகளை நீக்கியதற்காக, பாஜகவை மக்கள் பழிவாங்குவார்கள் என்று தோன்றுகிறது” என்று பேசினார்.

இதனிடையே மம்தா பானர்ஜி தனது எக்ஸ் தளத்தில், “நேற்று நடைபெற்ற பாதயாத்திரை மற்றும் மக்கள் சபை கூட்டங்களில் மக்கள் வெளிப்படுத்திய உற்சாகம், உண்மையான அன்பு ஆகியவை வார்த்தைகளால் விவரிக்க முடியாத வகையில் என்னை நெகிழச் செய்துள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மேற்கு வங்கம் நீண்ட காலமாகவே நல்லிணக்கத்தின் கலங்கரை விளக்கமாகவும், நாகரிகப் பெருமையின் அடையாளமாகவும் திகழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

<div class="paragraphs"><p>கேஜ்ரிவால் </p></div>
ராகவ் சத்தா உள்பட 7 எம்.பி.க்கள் பாஜகவில் இணைய மாநிலங்களவைத் தலைவர் ஒப்புதல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in