வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தென்​மேற்கு வங்​கக்​ கடல் பகு​தியில் புதிய காற்றழுத்த தாழ்​வுப் பகுதி உரு​வானது. இதனால் 15, 16-ம் தேதி​களில் 10 மாவட்​டங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: வடக்கு இலங்கை கடலோரப் பகு​திகளுக்கு அப்பால் உள்ள தென்​மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் புதிய காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி உரு​வாகி​யுள்​ளது. இது அடுத்த 24 மணி நேரத்​தில் மேலும் வலுப்​பெறக்​ கூடும். சுமார் 1.5 கி.மீ. உயரத்​திலிருந்து 4.5 கி.மீ உயரம் வரை காற்​றழுத்த தாழ்​வுப் பகு​தி​யின் மையப் பகு​தி​களி​லிருந்து தெற்கு லட்​சத்​தீவு பகு​தி​கள் வரை, தென் தமிழகம் வழி​யாக ஒரு வளிமண்டல காற்​றழுத்த தாழ்​வுப் பாதை நில​வு​கிறது.

இதன் காரண​மாக இன்று (மே 12) தென் தமிழகம் மற்​றும் தஞ்சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை ஆகிய டெல்டா மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், காரைக்​கால் பகுதிகளி​லும், 13, 14-ம் தேதி​களில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள் மற்​றும் டெல்டா மாவட்​டங்​களில் ஓரிரு இடங்களிலும், காரைக்​கால் பகு​தி​களி​லும் மித​மான மழை பெய்யக்​கூடும்.

15, 16-ம் தேதி​களில் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், 17-ம் தேதி தென் தமிழகம் மற்​றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களிலும் இடி, மின்​னலுடன் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

15, 16-ம் தேதி​களில் நீல​கிரி, கோவை, ஈரோடு, திருப்​பூர், தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், புதுக்​கோட்​டை, ராம​நாத​புரம் மற்​றும் சிவகங்கை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்​யக்​கூடும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
லஞ்சம் வாங்கியதாக பொறியாளர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in