வானிலை முன்னறிவிப்பு: ராமநாதபுரம், தூத்துக்குடிக்கு கனமழை வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: ராமநாதபுரம், தூத்துக்குடிக்கு கனமழை வாய்ப்பு
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்தில் நாளை (நவ.10) ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (நவ.10) ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இதர ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

11-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இதர ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (நவ.10) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 11 செ.மீ.,  திருச்செந்தூர், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், ஆவடி, சென்னை எம்ஜிஆர் நகர், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, மண்டபம் ராணிப்பேட்டை, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டையில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு: ராமநாதபுரம், தூத்துக்குடிக்கு கனமழை வாய்ப்பு
எஸ்எஸ்ஐ செந்தில்குமாரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்க அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்

X