“திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்ததை வரவேற்கிறோம்” - மாணிக்கம் தாகூர்

“திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்ததை வரவேற்கிறோம்” - மாணிக்கம் தாகூர்
Updated on
1 min read

சிவகாசி: "திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்ததை வரவேற்கிறோம். கூட்டணி பேச்சு வார்த்தைக்கு திமுக குழு அமைக்க காத்து இருக்கிறோம்" என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

சிவகாசி கண்ணகி காலனியில் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை மாணிக்கம் தாகூர் திறந்து வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்ததை வரவேற்கிறோம். திமுக - காங்கிரஸ் உறவு நீண்ட கால உறவு. கூட்டணி பேச்சு வார்த்தைக்கு திமுக குழு அமைக்க காத்து இருக்கிறோம்.

இண்டியா கூட்டணியின் முக்கியமான தலைவர் ஸ்டாலின். கே.சி.வேணுகோபால் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள் உடன் சந்தித்ததால், மூத்த தலைவர்கள் சந்திக்கவில்லை. அவர் முதல்வரை சந்திக்கும் திட்டம் இல்லை. மணி சங்கர் அய்யருக்கு ராஜ்யசபா சீட் வழங்காததால் விரக்தியில் பேசுகிறார். காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் கருத்தை பெரிதாக எடுத்துகொள்ள வேண்டாம்.

அதிமுக கூட்டணி சிவகாசியில் தொடங்கி அனைத்து தொகுதிகளிலும் 3-வது இடம் பிடிப்பது உறுதி. 2026 தேர்தலில் பாஜக தலைவர்கள் பலர் போட்டியிடாமல் ஓட உள்ளனர். நயினார் நாகேந்திரன் தொகுதி மாற உள்ளார். அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 1996-ல் இருந்த நிலைமைக்கு பாஜக சென்று விட்டது.

விருதுநகர் தொகுதியில் இனி போட்டியிட மாட்டேன். தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் கடைசி மூச்சு உள்ளவரை விருதுநகர் தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன். எய்ம்ஸ் கட்டுமான பணி தாமதத்துக்கு காரணம் மாநில அரசு அல்ல, ஜப்பான் அரசின் விதிமுறைகளே காரணம்” என்றார். விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி உடன் இருந்தார்.

“திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்ததை வரவேற்கிறோம்” - மாணிக்கம் தாகூர்
அதிமுக+ Vs தவெக: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது யாருக்கு அதிக பாதிப்பு?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in