

சென்னை குடிநீர் வாரியம்
கோப்புப் படம்
சென்னை: வீராணம் குடிநீர் குழாய் மாற்றியமைக்கும் பணி காரணமாக நவ.11 முதல் 14-ம் தேதி வரை சென்னையில் 5 மண்டலங்களில் குடிநீர் குறைவாக வழங்கப்படும்.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், கடலூர் மாவட்டம், மருவாய் கிராமம் (வடலூர் அருகில் ) சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குடிநீர் குழாய் மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக நவ.11-ம் தேதி காலை 6 முதல் 15-ம் தேதி காலை 6 மணி வரை மண்டலம் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு ஆகிய மண்டலங்களில் குறைந்த அளவில் குடிநீர் விநியோகிக்கப்படும்.
குறிப்பாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 122, 123, 124, 125, 126 ஆகிய வார்டுகள், கோடம்பாக்கம் மண்டலத்தில் 127 முதல் 142-வது வார்டு வரை, வளசரவாக்கம் மண்டலத்தில் 143 முதல் 155-வது வார்டு வரை, ஆலந்தூர் மண்டலத்தில் 156 முதல் 167-வது வார்டு வரை, அடையாறு மண்டலத்தில் 168 முதல் 180 வார்டு வரை குடிநீர் விநியோகம் குறைந்த அளவில் இருக்கும்.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.