சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு 10 நாட்களில் 906 மில்லியன் கனஅடி அதிகரிப்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு 10 நாட்களில் 906 மில்லியன் கனஅடி அதிகரிப்பு
Updated on: 
1 min read

திரு​வள்​ளூர்: வடகிழக்கு பரு​வ​மழை​யால், சென்​னைக் குடிநீர் ஏரி​களில் 10 நாட்​களில் நீர் இருப்பு 906 மில்​லியன் கனஅடி அதி​கரித்​துள்​ள​தாக நீர்வள ஆதா​ரத் துறை​யினர் தெரி​வித்​துள்​ளனர்.

வடகிழக்கு பருவ மழை காரண​மாக திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம் மாவட்​டங்​களில் உள்ள சென்​னைக்கு குடிநீர் தரும் முக்​கிய ஏரி​களான பூண்​டி, புழல், சோழ​வரம், கண்​ணன்​கோட்​டை-தேர்​வாய் கண்​டிகை மற்​றும் செம்​பரம்​பாக்​கம் ஏரி​களுக்கு நீர்​வரத்து இருந்து வரு​கிறது.

இதனால் 5 ஏரி​களி​லும் நீர் இருப்பு அதி​கரித்து வரு​கிறது. நேற்று காலை நில​வரப்​படி புழல் ஏரிக்கு விநாடிக்கு 210 கனஅடி, பூண்டி ஏரிக்கு 490 கனஅடி, கண்​ணன்​கோட்​டை தேர்​வாய் கண்​டிகை ஏரிக்கு 50 கனஅடி, சோழ​வரம் ஏரிக்கு 10 கனஅடி நீர் மற்​றும் செம்​பரம்​பாக்​கம் ஏரிக்கு 150 கனஅடி நீர் வந்​து​கொண்​டிருக்​கிறது.

ஆகவே நேற்று காலை நில​வரப்​படி, 3,300 மில்​லியன் கனஅடி கொள்​ளளவு கொண்ட புழல் ஏரி​யில் 2,415 மில்​லியன் கனஅடி, 3,231 மில்​லியன் கனஅடி கொள்​ளளவு கொண்ட பூண்டி ஏரி​யில் 565 மில்​லியன் கனஅடி, 500 மில்​லியன் கனஅடி கொள்​ளளவு கொண்ட கண்​ணன்​கோட்​டை-தேர்​வாய் கண்​டிகை ஏரி​யில் 253 மில்​லியன் கனஅடி நீர் இருப்பு உள்​ளது.

அதே​போல் 1,081 மில்​லியன் கனஅடி கொள்​ளளவு கொண்ட சோழ​வரம் ஏரி​யில் 144 மில்​லியன் கனஅடி மற்​றும் 3,645 மில்​லியன் கனஅடி கொள்​ளளவு கொண்ட செம்​பரம்​பாக்​கம் ஏரி​யில் 1,488 மில்​லியன் கனஅடி என நீர் இருப்பு உள்​ளது.

இதனால் 11,757 மில்​லியன் கனஅடி மொத்​தக் கொள்​ளளவு கொண்ட சென்​னைக்கு குடிநீர் வழங்​கும் 5 ஏரி​களில், கடந்த 15-ம் தேதி காலை நில​வரப்​படி 3,959 மில்​லியன் கனஅடி நீர் இருப்பு இருந்​தது. இது நேற்று காலை நில​வரப்​படி 4,865 மில்​லியன் கனஅடி​யாக அதி​கரித்​துள்​ளது.

அதாவது 10 நாட்​களில் மொத்த நீர் இருப்பு 906 மில்​லியன் கனஅடி அதி​கரித்​துள்​ளது என, நீர்வள ஆதாரத் துறையினர் கூறினர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு 10 நாட்களில் 906 மில்லியன் கனஅடி அதிகரிப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு: நீர்வரத்து, நீர்மட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in