செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு: நீர்வரத்து, நீர்மட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்

செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு: நீர்வரத்து, நீர்மட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்
Updated on: 
1 min read

காஞ்சிபுரம்: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத் தூர் அருகே உள்ள செம்பரம் பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஏரியின் தற்போதைய நீர்மட்டம், நீர்வரத்து, நீர் வெளியேற்றம் மற்றும் நீர் மேலாண்மைப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

மழை தொடரும் நிலையில், ஏரியின் நீர் நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. ஏரியின் முழுக் கொள்ளளவு 24 அடி என்ற நிலையில், தற்போது நீர்மட்டம் 14.76 அடியாக உள் ளது. ஏரிக்கு விநாடிக்கு 150 முதல் 160 கன அடி வரை நீர் வந்து கொண்டிருக்கிறது.

ஏரியிலிருந்து விநாடிக்கு 208 கன அடி நீர் வெளியேற் றப்படுகிறது. சென்னையின் குடிநீர்த் தேவைக்கும், தொழிற்சாலை மற்றும் பாசனத் தேவை களுக்கும் இந்த ஏரி முக்கிய நீராதாரமாக விளங்குகிறது.

ஆய்வை முடித்துவிட்டுத் திரும்பியபோது, சாலையோரத்தில் திரண்டிருந்த பொதுமக்களையும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களையும் முதல்வர் விஜய் சந்தித் தார். காரிலிருந்து இறங்கி, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து நலம் விசா ரித்தார்.

இந்த ஆய்வின்போது நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த், வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தென் னரசு, தலைமைச் செயலர் எம்.சாய்குமார், நீர்வளத்துறை செயலர் பிரசாந்த் எம்.வட நேரே, காஞ்சிபுரம் ஆட்சியர் தி.சினேகா, சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர். மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அரவிந்த் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணி யில் ஈடுபட்டனர்.

செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு: நீர்வரத்து, நீர்மட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்
குதிரைபேரப் புகாரில் அமைச்சர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in