கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

மதுரை சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையின் சிறிய மதகுகள் வழியே வெளியேறும் நீர்.

மதுரை சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையின் சிறிய மதகுகள் வழியே வெளியேறும் நீர்.

Updated on
1 min read

ஆண்​டிபட்டி: மதுரை சித்​திரைத் திரு​விழா​வின் உச்ச நிகழ்​வான கள்​ளழகர் ஆற்​றில் எழுந்​தருளும் வைபவத்​துக்​காக வைகை அணையி​லிருந்து நேற்று கால்​வாய் வழியே தண்​ணீர் திறந்து விடப்​பட்​டது.

மதுரை​யில் சித்​திரை திரு​விழான் முக்​கிய நிகழ்​வாக மே 1-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்​றில் இறங்​கும் வைபவம் நடை​பெற உள்​ளது. இதில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் பங்​கேற்​பர் என்​ப​தால், வைகை அணை​யில் இருந்து தண்​ணீர் திறக்க தமிழக அரசு உத்​தர​விட்​டது.

இதன்​படி மொத்​தம் 170 மில்​லியன் கனஅடி நீர் திறக்க நீர்​வளத் துறை அரசாணை வெளி​யிட்​டது. இதனைத் தொடர்ந்து நேற்று முதல் விநாடிக்கு 500கனஅடி நீர் திறக்​கப்​பட்​டது.

அணை​யின் சிறிய மதகு​கள்வழியே வெளி​யேறிய நீர், முதலக்​கம்​பட்டி பிக்​-அப் அணை​யில் இருந்து கால்​வாய் வழியே திருப்பி விடப்​பட்​டுள்​ளது. தொடர்ந்து வாய்க்​கால் வழியே மதுரை செல்​லும் இந்த நீர் செல்​லூர் கண்​மா​யில் தேக்​கப்​பட்டு பின்பு ஆற்​றில் மீண்​டும் கலக்​கும்.

வரும் 29-ம் தேதி வரை தொடர்ந்து நீர் திறக்​கப்படும். இணைப்புக் கால்​வாயில் இறங்​கவோ, குளிக்​கவோ வேண்​டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நீர்​வளத்​துறை​யினர் கூறுகை​யில், வைகை அணை​யில் இருந்து மதுரை வரையி​லான வைகை ஆறு வறண்டு கிடக்​கிறது.

வெயிலும் சுட்​டெரிப்பதால், தொடக்​கம் முதல் கடைசிவரை ஆற்​றில் தண்​ணீர் திறந்​து​விட்​டால் வழி​யிலேயே நீர் உறிஞ்​சப்​படும். ஆகவே சிமெண்ட் கால்​வா​யில் தண்​ணீர் திறக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் நீர் விர​யம் இருக்காது. இதன்மூலம் குடிநீர்திட்​டக் கிணறுகளின்​ நீர்​ ஆதா​ர​மும்​ உயரும்​ என்​றனர்​.

<div class="paragraphs"><p>மதுரை சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையின் சிறிய மதகுகள் வழியே வெளியேறும் நீர்.</p></div>
திருவாரூரில் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி இசை விழா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in