திருவாரூரில் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி இசை விழா

திருவாரூரில் நேற்று நிறைவடைந்த சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி இசை விழாவில் தியாகப்ரும்மத்தின் பஞ்சரத்ன கீர்த்தனையை இசைத்த இசைக் கலைஞர்கள்.

திருவாரூரில் நேற்று நிறைவடைந்த சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி இசை விழாவில் தியாகப்ரும்மத்தின் பஞ்சரத்ன கீர்த்தனையை இசைத்த இசைக் கலைஞர்கள்.

Updated on
1 min read

திருவாரூர்/ தஞ்சாவூர்: சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி இசை விழாவையொட்டி, திருவாரூரில் நேற்று இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைத்தனர்.

திருவாரூரில் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி இசை விழா ஏப்.19-ம் தேதி  சியாமா சாஸ்திரிகள் இல்லத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  முத்துஸ்வாமி தீட்சிதர் க்ரஹ நூதன அரங்கத்தில், மங்கல இசை மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று  சத்குரு தியாகப்ரும்மத்தின் 259-வது ஜெயந்தியை முன்னிட்டு, தியாகப்ரும்மம் இல்லத்தில் காலை உஞ்சவிருத்தி, விதை தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றன.

தொடர்ந்து, முத்துசுவாமி நூதன க்ரஹ அரங்கில், பாலசுந்தரம், கார்த்தி மற்றும் உமாசங்கர், ஜெயசூர்யா குழுவினரின் நாகசுர இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர், பிரபல வித்வான்கள், விதூஷிகள் பங்கேற்ற  தியாகப்ரும்மத்தின் பஞ்சரத்ன கீர்த்தனையை, சங்கீத வித்வான்கள் டாக்டர் கணேஷ், ஆண்டாங் கோவில் சிவக்குமார், சுந்தரராஜன், வரப்பிரசாத், சுசித்ரா பாலசுப்பிரமணியன் மற்றும் வீணை, வயலின், மாண்டலின், புல்லாங்குழல், கடம், கஞ்சிரா, முகர்சிங் உள்ளிட்ட வாத்திய கலைஞர்கள் பலர் பங்கேற்று இசைத்தனர்.

<div class="paragraphs"><p>திருவையாறில் சத்குரு தியாகராஜர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.</p></div>

திருவையாறில் சத்குரு தியாகராஜர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி இசை விழாக் குழுகவுரவத் தலைவர் டாக்டர் ஆர்.ராமசுப்பு, தலைவர் கார்த்திகேயன், துணைத் தலைவர் பாஸ்கர், மும்பை தரன், வேலுடையார் கல்விக் குழுமம் தியாகபாரி, டாட்டாஸ் மதி, மணக்கால் ராமகிருஷ்ணன், ஆடிட்டர் பாலாஜி வெங்கட்ராமன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழா நேற்று மாலை நிறைவடைந்தது.

திருவையாறில்..

இதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு தியாகராஜரின் 259-வது ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது.

தியாகராஜரின் ஜீவ சமாதியில் நடைபெற்ற இவ்விழாவில் பரம்பரை பூஜா ஸ்தானிகர் தியாகராஜ சர்மா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவற்றை செய்தார்.

மேலும், கர்னாடக இசைக் கலைஞர்கள், வித்வான்கள் தியாக பிரும்மத்தின் பஞ்சரத்தின கீர்த்தனைகள், சம்பிரதாய கீர்த்தனைகளுடன் இரவு வரை தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், ஆஞ்சநேயர் உற்சவத்துடன் ஜெயந்தி விழா நிறைவடைந்தது. விழாவையொட்டி பத்தர்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

<div class="paragraphs"><p>திருவாரூரில் நேற்று நிறைவடைந்த சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி இசை விழாவில் தியாகப்ரும்மத்தின் பஞ்சரத்ன கீர்த்தனையை இசைத்த இசைக் கலைஞர்கள். </p></div>
5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 5 மரண தண்டனை விதிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in