

மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 82 கனஅடியாக சரிந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 220 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று விநாடிக்கு 82 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92.12 அடியிலிருந்து 91.96 அடியாகவும், நீர் இருப்பு 55.10 டிஎம்சியிலிருந்து 54.91 டிஎம்சியாகவும் குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 4-ம் தேதி காலை 6 மணி அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 2,000 கனஅடியாகப் பதிவானது.
5-ம் தேதி காலையில் விநாடிக்கு 1,500 கனஅடியாகக் குறைந்தது. நேற்று காலை அளவீட்டின்போது நீர்வரத்து மேலும் சரிவடைந்து விநாடிக்கு 1,200 கனஅடியாக பதிவானது.