திருக்கோஷ்டியூர் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தங்க கோபுரத்துக்கு ஊற்றப்பட்ட புனிதநீர்.  (அடுத்த படம்) சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள்.

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தங்க கோபுரத்துக்கு ஊற்றப்பட்ட புனிதநீர். (அடுத்த படம்) சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள்.

Updated on
1 min read

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் அருகே திருக்​கோஷ்டியூரில் சிவகங்கை தேவஸ்​தானத்துக்கு உட்​பட்ட சவுமிய நாராயணப் பெரு​மாள் கோயில் உள்​ளது. 108 வைணவத் தலங்​களில் ஒன்​றான இக்கோயில் மூலவர் கோபுரம் 108 அடி உயரத்​தில் அஷ்​டாங்க விமான​மாக உள்​ளது.

இது ‘ஓம் நமோ நாராயணாய’ எனும் மந்​திரத்தை உணர்த்​தும் வகை​யில் 3 தளங்​களாக உள்​ளன. இதில் உச்​சி​யில் உள்ள தளமான முதல் நிலைக்கு தங்​கத் தகடு வேயும் திருப்​பணி நடை​பெற்​றது. மொத்​தம் 32 கிலோ அளவி​லான தங்​கத் தகடு வேயப்​பட்​டது. திருப்​பணி முடிந்த நிலை​யில் நேற்று கும்​பாபிஷேகம் நடை​பெற்​றது.

இதையொட்​டி, கடந்த 1-ம் தேதி முதல் பல்​வேறு சிறப்பு பூஜைகள், ஹோமங்​கள் நடை​பெற்​றன. நேற்று காலை 8 மணிக்கு யாக​சாலை​யி​லிருந்து கடம் புறப்​பாடு நடை​பெற்​றது. காலை 9.55 மணிக்கு மூல​வர் தங்க விமான கும்​பத்​தில் புனித நீர் ஊற்றி கும்​பாபிஷேகம் நடை​பெற்​றது.

அமைச்​சர் கேஆர்​.பெரிய கருப்​பன், சிவகங்கை தேவஸ்​தான பரம்​பரை அறங்​காவலர் மது​ராந்​தகி நாச்​சி​யார், மேலா​ளர் இளங்​கோ, இலங்கை முன்​னாள் அமைச்​சர் செந்​தில் தொண்​டமான், அறக்​கட்​டளைத் தலை​வர்காந்​தி, திருப்​பணி​கள் குழுத் தலை​வர் ராஜ்மோகன் அருணகிரி, துணைத் தலை​வர் ரவிச்​சந்​திரன், செய​லா​ளர் ராம் பட்​டாச்​சா​ரியர், பொருளாளர் கதிர்​வேலன், கவுர​வத் தலை​வர்​கள் மணி​கண்​டன், ராமேசுவரன், பெரு​மாள் உள்ளிட்டோர் பங்​கேற்​றனர்.

<div class="paragraphs"><p>திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தங்க கோபுரத்துக்கு ஊற்றப்பட்ட புனிதநீர்.  (அடுத்த படம்) சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள்.</p></div>
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 07 பிப்ரவரி 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in