ராமநாதபுரத்தில் குப்பையில் கிடந்ததாக பறிமுதல் செய்யப்பட்டது ரூ.5 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கமா?

போலீஸார் பதுக்கியதாக வெளியான தகவலுக்கு விளக்கம்
பிரதிநிதித்துவப் படம்

பிரதிநிதித்துவப் படம்

Updated on
1 min read

ராமநாதபுரம்: ​ராம​நாத​புரத்​தில் சிக்​கிய ரூ.5 கோடிக்​கும் மேலான மதிப்​புள்ள தங்​கம், கடத்​தலில் தொடர்புடைய​தா, ஏராள​மான நகைகளை போலீ​ஸார் பதுக்​கி​யுள்​ளனரா என்ற சந்​தேகங்​களு​டன் பல்​வேறு தகவல்​கள் வெளி​யாகி வருவதை போலீ​ஸார் மறுத்​துள்​ளனர்.

ராம​நாத​புரம் போதைப்​பொருள் தடுப்பு தனிப்​படை போலீ​ஸார் செப்.18-ம் தேதி நள்​ளிரவு பட்​ட​ணம்​காத்​தானில் 5 பேரை பிடித்தனர். அவர்கள் வைத்​திருந்த பையில் ரூ.5 கோடி மதிப்​புள்ள 3.800 கிலோ எடை​யுள்ள 38 தங்​கக் கட்​டிகள், 226.8 கிராம் நகைகள், ரூ.12.20 லட்​சத்தை பறி​முதல் செய்தனர்.

கேணிக்கரை போலீஸார் நடத்​திய விசா​ரணை​யில், அவர்கள் ராம​நாத​புரம் குப்​பு​சாமி, பரமக்​குடி செல்​வ​ராஜ், தூத்​துக்குடி பாலுகுட்டி என்ற சரவணன், மாரி​முத்து என்ற பூப​தி, வேலா​யுதம் ஆகியோர் எனத் தெரிய வந்​தது.

இவர்​கள் எம்​ஜிஆர் நகர் அருகே குப்​பைக் கிடங்கு பகு​தி​யில் வந்​த​போது கேட்​பாரற்று கிடந்த பையில் தங்​கக் கட்​டிகள், நகை, பணம் இருந்​தது எனக் கூறிய​தாக போலீஸ் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. இவர்​களிடம் விசா​ரணை நடத்​திய போலீ​ஸார், நகைகள் கேட்​பாரற்​றுக் கிடந்​தது​தான் என வழக்கு பதிந்து 5 பேரை​யும் விடு​வித்தனர்.இந்​தச் சம்​பவம் குறித்து போலீ​ஸார் ஊடகங்​களுக்கு தகவல் தர​வில்​லை. இதனால் ஜோடிக்​கப்​பட்ட வழக்​கு​போல் சந்​தேகம் ஏற்​பட்டது.

இதற்​கடையே சிக்​கியது 25 கிலோ தங்​கம் என்​றும், இது தாமிரபரணி ஆற்​றில் கண்​டெடுக்கப்​பட்​ட​தாக​வும், பெரும்பகுதி தங்​கத்தை போலீ​ஸார் பதுக்​கி​விட்​ட​தாக​வும் தகவல் பரவியது. மேலும், கடத்தி வரப்​பட்​ட​போது பிடிபட்​டது என்​றும் கடத்​தல்​காரர்​கள் வேறு நபர்​களைப் பயன்​படுத்தி தங்​கத்​தைக் கைப்​பற்ற நினைத்​த​போது போலீ​ஸில் சிக்​கிய​தாக​வும் பல தகவல்​கள் சமூக ஊடகங்​களில் வெளி​யாகின.

சில பவுன் தங்​கத்​தைக் கைப்​பற்​றி​னாலே பத்​திரி​கை​யாளர் சந்​திப்பு நடத்​தும் போலீ​ஸார் ரூ.5 கோடி தங்​கம் சிக்​கியது குறித்து 5 நாட்​களாக எந்த அறி​விப்​பை​யும் வெளி​யிடாததும் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யது. சுங்​கத் துறை​யும் எந்​தத் தகவலையும் வெளி​யிட​வில்​லை.

இதற்​கிடையே, நேற்று ராம​நாத​புரம் மாவட்ட போலீஸ் தரப்​பில் வெளி​யான அறி​விப்​பில், கைப்​பற்​றப்​பட்ட ரூ.5 கோடி மதிப்​பிலான தங்​கம், ரொக்​கம் நீதி​மன்ற உத்​தர​வின்​பேரில் கரு​வூலத்​தில் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளன. கடத்​தல் தங்​கமா என விசா​ரணை நடத்த சுங்​கத்​துறை மற்​றும் வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரகத்​துக்கு விவரங்​கள் அனுப்​பப்​பட்​டுள்​ளன. விசா​ரணை தொடரும் நிலை​யில், தவறான தகவல்​களைப் பகிர​வோ, வெளி​யிடவோ வேண்​டாம் என கேட்​டுக்​கொள்​வ​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>பிரதிநிதித்துவப் படம்</p></div>
“அமெரிக்காவுக்கு ஒருபோதும் பணியமாட்டோம்” - ட்ரம்புக்கு ஈரான் அதிபர் பதிலடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in