தனித்தமிழை தாங்கிப் பிடித்தவர் மறைமலையடிகள்: விஐடி பல்கலை. வேந்தர் புகழாரம்

தனித்தமிழை தாங்கிப் பிடித்தவர் மறைமலையடிகள்: விஐடி பல்கலை. வேந்தர் புகழாரம்
Updated on
2 min read

சென்னை: தமிழியக்​கம், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்​றம் மற்​றும் மறைமலை​யடிகள் கல்வி அறக்​கட்​டளை சார்​பில் தனித்​தமிழ் இயக்​கத்​தின் தந்தை என போற்​றப்​படும் மறைமலை​யடிகளின் 150-வது பிறந்​த​நாள் பெரு​விழா சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் தமிழியக்​கத்​தின் நிறு​வனரும், வேலூர் விஐடி பல்​கலைக்​கழக வேந்​தரு​மான கோ.​விசுவ​நாதன் தலை​மை​யுரை ஆற்றி பேசி​ய​தாவது: தமிழ் மொழியைக் காக்​க​வும், தமிழ்க் கலப்பை தடுக்க​வும் தனித் ​தமிழ் இயக்​கத்தை தொடங்​கிய​வர் மறைமலையடிகள்.

குழந்​தைகளுக்கு தமிழ்ப்​பெயர் சூட்ட வேண்​டும் என்று மறைமலை​யடிகள் தொடர்ந்து வலி​யுறுத்​தி​னார். தற்​போது பெயரை பார்த்து தமிழர்​கள் என்று அடை​யாளம் காண முடி​யாத சூழல்​தான் உள்​ளது.

ஆனால், ஒரு பிஹாரி, பெங்​காலி​யின் பெயரை வைத்து அவர் இந்த மாநிலத்​தைச் சேர்ந்​தவர் என்று சொல்லி விடலாம். குழந்​தைகளுக்கு தமிழ்​ பெயரை சூட்ட தமிழர்​கள் முன்வர வேண்​டும் தமிழ்​தான் நம்மை ஒன்​றுசேர்க்​கும்.

கடந்த 1937-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை மொழிப் பிரச்​சினை இருந்​து​கொண்​டு​தான் இருக்​கிறது. கல்​வியை மீண்​டும் மாநிலப் பட்​டியலுக்கு மாற்​றி​னால்​தான் மொழிப் பிரச்​சினை தீரும். இந்தி மொழி வளர ஆங்​கிலத்தை அழிக்க நினைக்​கின்​றனர். இன்​றைய தினம் இந்​தி​யா​வின் பல மாநிலங்​களில் ஆங்​கிலம்​தான் ஆட்​சிமொழி​யாக இருந்து வரு​கிறது.

தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்​பட்​டாலோ, ஆங்​கிலம் அந்நிய மொழி என்று சொல்லி வேறொரு மொழியை புகுத்த முயன்​றாலோ தனித்​தமிழ் இயக்​கம் அதற்கு எதி​ராக போராடு்ம். மொழிப் பிரச்​சினையை தீர்க்க மத்​தி​ய-​மாநில அரசுகள் கலந்து ஆலோ​சிக்க வேண்​டும்.

இவ்​வாறு விசுவ​நாதன் பேசி​னார். பள்​ளிக்​கல்​வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்​றும் விளம்​பரத்​துறை அமைச்​சர் ஆ.ராஜ் மோகன் சிறப்​புரை ஆற்றி பேசும்​போது, ‘தூய தமிழ்ப்​பற்​றாள​ரான மறைமலை​யடிகளின் புகழும், அவரது தமிழ்ச்​சேவை​யும் பல நூற்​றாண்​டு​கள் நிலைத்​திருக்​கும்.

உலகம் முழு​வதும் இருக்​கும் தமிழ் அறிஞர்​கள் அனை​வரை​யும் ஒரே குடை​யின் கீழ் கொண்​டு​வந்து ஏராள​மான தமிழ்ப்​பணி​களை செய்ய திட்​ட​மிட்​டுள்​ளோம்' என்​றார்.மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ பேசும்​போது, “21 வயதுக்​குள் தொல்​காப்​பி​யம், பத்​துப்​பாட்​டு, கலித்​தொகை உள்​ளிட்ட தமிழ் இலக்​கி​யங்​களை எல்​லாம் மனப்​பாடம் செய்​தவர் மறைமலை​யடிகள்.

தமிழ் இலக்​கி​யத்​துக்கு சுவை ஊட்​டிய அவர், தமிழர்​களை விழிப்​படையச் செய்​தார் தமிழ் மொழி வேறு, வடமொழி வேறு என்ற கருத்தை 19-ம் நூற்​றாண்​டில் கூறிய​வர் கால்​டு​வெல். இதே கருத்தை 20-ம் நூற்​றாண்​டில் சொன்​னவர் மறைமலை​யடிகள். தென்​னாட்டு நாகரி​கம் தனி நாகரி​கம். அந்த நாகரி​கத்தை பாது​காக்க வேண்​டும் என்று தொடர்ந்து வலி​யுறுத்தி வந்​தார்” என்று குறிப்​பிட்​டார்.

தமிழியக்​கம் செய​லா​ளர் மு.சுகு​மார், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற ஒருங்​கிணைப்​பாளர் மோசஸ் மைக்​கேல் பாரடே, ஆகியோர் வாழ்த்​திப்பேசினர். முன்​ன​தாக, மறைமலை​யடிகளின் பேரனும், மறைமலை​யடிகள் கல்வி அறக்​கட்​டளை​யின் தலை​வரு​மான தா​யு​மானவன் வரவேற்​றார். நிறை​வாக, தமிழியக்​கம் திரு​வள்​ளூர் மாவட்​டச்​ செய​லா​ளர்​ சே.வரலட்​சுமி நன்​றி கூறி​னார்​.

தனித்தமிழை தாங்கிப் பிடித்தவர் மறைமலையடிகள்: விஐடி பல்கலை. வேந்தர் புகழாரம்
பேருந்து நிலையத்தை சீரமைக்க டெண்டர் இல்லாமல் ரூ.10 லட்சத்தில் பணி: திருப்போரூர் பேரூராட்சியில் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in