பேருந்து நிலையத்தை சீரமைக்க டெண்டர் இல்லாமல் ரூ.10 லட்சத்தில் பணி: திருப்போரூர் பேரூராட்சியில் குற்றச்சாட்டு

பேருந்து நிலையத்தை சீரமைக்க டெண்டர் இல்லாமல் ரூ.10 லட்சத்தில் பணி: திருப்போரூர் பேரூராட்சியில் குற்றச்சாட்டு
Updated on
2 min read

திருப்போரூர்: செங்​கல்​பட்டு மாவட்​டம், திருப்​போரூர் பேரூ​ராட்​சி​யில் செயல்​பட்டு வரும் மாநகரப் பேருந்து நிலை​யம், அப்​பகு​தி​யின் முக்​கிய போக்​கு​வரத்து மைய​மாக விளங்கி வரு​கிறது.

இங்​கிருந்து சென்​னை, கேளம்​பாக்​கம், சிறுசேரி, சோழிங்​கநல்​லூர் உள்​ளிட்ட பகு​தி​களுக்கு அரசு மற்​றும் மாநகரப் பேருந்​துகள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன. மேலும், திருப்​போரூர் கந்​தசு​வாமி கோயிலுக்கு தின​மும் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் மற்​றும் பொது​மக்​கள் வந்து செல்​வ​தால், இந்த பேருந்து நிலை​யம் எப்​போதும் மக்​கள் நடமாட்​டம் மிகுந்த இடமாக உள்​ளது.

பயணி​களின் வசதிக்​காக பேரூ​ராட்சி சார்​பில் அமைக்​கப்​பட்​டுள்ள மாநகரப் பேருந்து நிலை​யத்​தில், சமீபத்​தில் சுமார் ரூ.10 லட்​சம் மதிப்​பீட்​டில் சீரமைப்​புப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. ஆனால், இந்​தப் பணி​கள் அரசின் விதி​முறை​களை பின்​பற்​றாமல் மேற்​கொள்​ளப்​பட்​ட​தாக பரபரப்பு குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது.

அரசு நிதி​யில் மேற்​கொள்​ளப்​படும் அனைத்து வளர்ச்​சித் திட்​டப் பணி​களும் வெளிப்​படைத்​தன்​மை​யுடன் நடை​பெற வேண்​டும் என்​றும், நிர்​ண​யிக்​கப்​பட்ட மதிப்​பீட்​டுக்கு மேற்​பட்ட பணி​கள் மின்​-டெண்​டர் (e-Tender) முறை​யில் ஒப்​பந்​தம் வழங்​கப்​பட்ட பின்​னரே செயல்​படுத்​தப்பட வேண்​டும் என்​றும் அரசு தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கிறது.

ஆனால், திருப்​போரூர் மாநகரப் பேருந்து நிலைய சீரமைப்​புப் பணி​யில் டெண்​டர் நடை​முறையே பின்​பற்​றப்​பட​வில்லை என்​றும், பேரூ​ராட்சி நிர்​வாகம் தன்​னிச்​சை​யாக பணியை மேற்​கொண்​ட​தாக​வும் சமூக ஆர்​வலர்​கள் குற்​றம்​சாட்​டு​கின்​றனர்.

மேலும், அரசு வழி​காட்​டு​தலின்​படி நடை​பெறும் ஒவ்​வொரு பணி​யிடத்​தி​லும் திட்ட விவரங்​கள் அடங்​கிய தகவல் பலகை கட்​டா​யம் வைக்​கப்பட வேண்​டும்.

அந்த பலகை​யில், பணி பெயர், திட்ட மதிப்​பீடு, எந்த நிதி​யின் கீழ் பணி நடை​பெறுகிறது, எவ்​வளவு நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது, ஒப்​பந்​த​தா​ரரின் பெயர், பணி​யின் தொடக்க மற்​றும் நிறைவு தேதி, பணியை மேற்​பார்வை செய்​யும் பொறி​யாளரின் பெயர் மற்​றும் தொடர்பு எண் உள்​ளிட்ட விவரங்​கள் இடம்​பெற வேண்​டும்.

ஆனால், இந்த சீரமைப்​புப் பணி​யில் இது​போன்ற தகவல் பலகை எது​வும் வைக்​கப்​பட​வில்லை என்​றும், பணி எந்த நிதி​யின் கீழ் மேற்​கொள்​ளப்​படு​கிறது என்​பது குறித்த விவரங்​கள் பொது​மக்​களுக்கு தெரிவிக்​கப்​பட​வில்லை என்​றும் குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது. “தகவல் பலகை வைக்​காததே முதல் விதி​மீறல்” என சமூக ஆர்​வலர்​கள் சுட்​டிக் காட்​டு​கின்​றனர்.

இது​மட்​டுமின்​றி, பேரூ​ராட்​சி​யில் அண்​மைக்​கால​மாக மேற்​கொள்​ளப்​பட்ட பல்​வேறு வளர்ச்​சிப் பணி​களி​லும் இதே​போன்ற நடை​முறை​கள் பின்​பற்​றப்​படு​வ​தாக​வும், டெண்​டர் நடை​முறை​கள் மற்​றும் வெளிப்​படைத்​தன்மை கேள்விக்​குறி​யாக இருப்​ப​தாக​வும் அவர்​கள் தெரிவிக்​கின்​றனர்.

எனவே, திருப்​போரூர் பேரூ​ராட்​சி​யில் சமீபத்​தில் மேற்​கொள்​ளப்​பட்ட அனைத்து பணி​களை​யும் செங்​கல்​பட்டு மாவட்ட நிர்​வாகம் முழு​மை​யாக ஆய்வு செய்ய வேண்​டும் என்​றும், இந்த சீரமைப்​புப் பணிக்​கான நிர்​வாக அனு​ம​தி, தொழில்​நுட்ப ஒப்​புதல், டெண்​டர் ஆவணங்​கள், நிதி ஒதுக்​கீடு மற்​றும் செல​வின விவரங்​களை விசா​ரித்து உண்மை நிலையை வெளிக்​கொணர வேண்​டும் என்​றும் சமூக ஆர்​வலர்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

மேலும், விதி​மீறல்​கள் உறுதி செய்​யப்​பட்​டால் சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​கள் மீது சட்​டப்​படி கடுமை​யான நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்​றும் அவர்​கள் வலி​யுறுத்​தி​உள்​ளனர்.

அரசு நிதி​யில் செயல்​படுத்​தப்​படும் ஒவ்​வொரு வளர்ச்​சித் திட்​ட​மும் பொது​மக்​களின் வரிப்​பணத்​தில் மேற்​கொள்​ளப்​படு​வ​தால், அவை அனைத்​தும் சட்ட விதி​முறை​களுக்கு உட்​பட்​டு, முழு வெளிப்​படைத்​ தன்​மை​யுடன் நடை​பெற வேண்​டும் என்​பதே மக்​களின் எதிர்​பார்ப்​பாக உள்​ளது.

எனவே, திருப்​போரூர் மாநகரப் பேருந்து நிலைய சீரமைப்​புப் பணி​யில் எழுந்​துள்ள குற்​றச்​சாட்​டு​கள் குறித்து மாவட்ட நிர்​வாகம் விரைந்து வி​சா​ரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்ற கோரிக்கை வலுத்​து வரு​கிறது.

பேருந்து நிலையத்தை சீரமைக்க டெண்டர் இல்லாமல் ரூ.10 லட்சத்தில் பணி: திருப்போரூர் பேரூராட்சியில் குற்றச்சாட்டு
ஓய்வுபெற்ற 46 ஆயிரம் பேருக்கு இடைக்கால ஓய்வூதியம்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in