

சென்னை: தேர்தல் கால பணப்பரிவர்த்தனை தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் ரொக்கப் பணபரிவர்த்தனை ரூ.50 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்படுகிறது.
பொதுமக்களின் பயன்பாடு காலமாற்றங்களை கருத்தில் கொண்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகளில் உரிய திருத்தம் செய்து, கையில் எடுத்துச்செல்லும் ரொக்கம் ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.5 லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவிக்க வலியுறுத்தி.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, திருவாரூரில் கடந்த மே 5-ம் தேதி நடைபெற்ற 43-வது வணிகர் தினம் மாநாட்டில் தீர்மானமாகக் கொண்டு வந்திருக்கிறது.
இயற்கை நீதியை நிலைநாட்ட, பொதுமக்கள் நலனை கவனத்தில் கொண்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வந்து, பணப்பரிவர்த்தனை ரூ.5 லட்சம் என உயர்த்தி அறிவிக்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.