

பிரேம் ஆனந்த், செந்தில் குமார்
சென்னை: ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு புதிய காவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதை அடுத்து பல்வேறு துறைகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
காவல் துறையை பொருத்தவரை, சட்டம் - ஒழுங்கு டிஜிபி மற்றும் உளவுத்துறை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை வரை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். சரக டிஐஜி, மாவட்ட எஸ்.பி.க்களும் தொடர்ந்து மாற்றப்பட்டு, அவர்களுக்கு புதிய பணியிடம் ஒதுக்கப்பட்டு வருகிறது.
நிர்வாக வசதிக்காகவும், பொதுமக்களின் சேவையை மேம்படுத்துவதற்காகவும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில், ஆவடி காவல் ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா தாம்பரம் காவல் ஆணையராகவும், டிஜிபி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தலைமையிடத்து கூடுதல் டிஜிபி செந்தில் குமார் ஆவடி காவல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலர் கே.மணிவாசன் பிறப்பித்துள்ளார்.