​மாற்றத்துக்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக்காட்டிய தமிழக மக்களுக்கு வாழ்நாள் நன்றி: விஜய் நெகிழ்ச்சி

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தவெக தலைவர் விஜய் நேற்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொள்கைத் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தவெக தலைவர் விஜய் நேற்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொள்கைத் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Updated on
1 min read

சென்னை: மாற்​றத்​துக்​கான அரசியல் வெற்​றியை நிகழ்த்​திக் காட்​டிய தமிழக மக்​களுக்கு வாழ்​நாள் நன்​றியை காணிக்​கை​யாக்​கு​கிறேன் என தவெக தலை​வர் விஜய் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: என் நெஞ்​சில் குடி​யிருக்​கும் அனை​வருக்​கும் வணக்​கம். கட்சி ஆரம்​பித்​த​தில் இருந்தே நம்மை ஏளன​மாகப் பார்த்​தவர்​களும் பேசி​ய​வர்​களுமே அதி​கம். அரசி​யலில் இது இயல்பே என்​று​தான் நாமும் அதைக் கடந்து வந்​தோம்.

எவரை​யும் சாராமல், மக்​களை மட்​டுமே நம்​பி, தேர்​தல் களத்​தி​லும் தில்​லாக நின்​றோம். நடுநிலை என்ற பெயரிலும் விமர்​சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்​குப்பரிசளிக்​கப்​பட்​டன.

ஆனால், நாம் யாருக்கு நன்​றிக் கடன் செலுத்த அரசி​யலுக்கு வந்​தோமோ அவர்​கள்.. நம் சொந்​தங்​களாகிய நம் தமிழக மக்​கள் நம்மை எப்​போதும் தாயன்​போடு தாங்​கியே பிடித்து வந்​தனர், வரு​கின்​றனர்.

அந்த தாயன்​போடு​தான் இந்​தத் தேர்​தலிலும் நமக்கு அளப்​பரிய அன்​புடன் அமோக​மான வாக்​கு​களை அள்​ளித் தந்​துள்​ளனர். இந்​திய அரசி​யல் களத்​தையே அதிர வைத்​திருக்​கும் இந்​தத் தேர்​தல் ஓர் அதிச​யத் தேர்​தல் என்​றோம். அது பல்​வேறு வகை​களி​லும் நிரூபண​மானது.

ஏராள​மான காரணி​கள் இருந்​தா​லும், குடும்​பத்​தையே தங்​கள் அன்​பால் வழிநடத்​திய குழந்​தைச் செல்​வங்​கள்​தான் அதிச​யத் தேர்​தலுக்​கான ஆழமான காரணி​களில் ஒன்​றாக மாறி நிற்​கின்​றனர்.

ஒரு மாபெரும் மாற்​றத்​துக்​கான இந்​தத் தேர்​தல் அரசி​யல் போரில் வென்​றது நம் தமிழக வெற்​றிக் கழகம் மட்​டுமன்​று. தமிழக மக்​களின் மனங்​களில் ஆசை ஆசை​யாக வளர்த்​தெடுக்​கப்​பட்ட உணர்​வுப்​பூர்​வ​மான ஜனநாயக​மும்​தான். அதனால்​தான் தமிழகத்​தில் ஓர் அரசி​யல் கலாச்​சா​ர​மாகவே மாறி அச்​சுறுத்​திக்​கொண்​டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்​டிப் புதைக்​கப்​பட்​டது.

தமிழக வெற்​றிக் கழகம், மாற்​றத்​துக்​கான மாபெரும் முதன்​மைச் சக்​தி​யான அரசி​யல் இயக்​கம் என்​பது, இதன் மூலம் ஆழமாக​வும் அழுத்​த​மாக​வும் நிரூபிக்​கப்​பட்​டுள்​ளது. நியாய​மான, நேர்​மை​யான பார்வை கொண்ட அனை​வரும் இதை அப்​படியே ஏற்​பர் என்​பதே உண்​மை.

எக்​காலத்​தி​லும் நிகழவே நிகழாது என்​றிருந்த மாற்​றத்​துக்​கான அரசி​யல் வெற்​றியை நிகழ்த்​திக் காட்​டிய தமிழக மக்​களாகிய என் சொந்​தங்​களுக்கு என் வாழ்​நாள் நன்​றியைக் காணிக்கை ஆக்​கு​கிறேன்.

நம் சொந்​தங்​களுக்கு நன்றி செலுத்​தும் அதே வேளை​யில், கழகத் தோழர்​கள், அனைத்து நிலை நிர்​வாகி​கள், விரிச்​சுவல் வாரியர்ஸ் என உங்​கள் ஒவ்​வொரு​வருக்​கும் தனித்​தனி​யாக என் நெஞ்​சார்ந்த நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

நமக்கு இந்​தத் தேர்​தலில் வாக்​களிக்க மறந்​தா​லும், எதிர்​வரும் காலங்​களில் நம்மை அதி​க​மாக நேசிக்​கப் போகும் நம் சொந்​தங்​களுக்​கும் என் அன்பை தெரி​வித்​துக்​கொள்​கிறேன்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்ளது.

<div class="paragraphs"><p>சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தவெக தலைவர் விஜய் நேற்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொள்கைத் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.</p></div>
தவெக-வுக்கு பெரும்பான்மை கிடைக்காத சூழல்: காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அவசர ஆலோசனைக் கூட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in