தவெக சட்டமன்றக் குழு தலைவராக விஜய் தேர்வு

தவெக சட்டமன்றக் குழு தலைவராக விஜய் தேர்வு
Updated on
1 min read

சென்னை: தவெக சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விஜய்​யின் தவெக 108 இடங்களைக் கைப்​பற்றி தனிப்​பெரும் கட்​சி​யாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்​கத் தேவை​யான பெரும்​பான்மை பலத்தை பெறவில்லை. இதையடுத்து, ஆட்சியமைக்க ஆளுநருக்கு தவெக கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படும் நிலையில், இன்று சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற தவெக எம்எல்ஏக்களை விஜய் சந்தித்தார்.

அப்போது, ஆட்சியமைப்பது தொடர்பாக ஆலோசனை நடந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து, அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவெக சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விஜய் முதல்வராக ஆதரவு அளித்து உறுதிமொழி பத்திரத்தில் எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.

இதற்கிடையில், கூட்டணிக்காக சில கட்சிகளுடன் விஜய் தரப்பில் ஆதரவு கோரப்பட்டு வருவதும் கவனிக்கத்தக்கது.

தவெக சட்டமன்றக் குழு தலைவராக விஜய் தேர்வு
தவெக எம்எல்ஏக்களுடன் விஜய் ஆலோசனை: கட்சி அலுவலகத்தில் கொள்கைத் தலைவர்களுக்கு அஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in