தவெக எம்எல்ஏக்களுடன் விஜய் ஆலோசனை: கட்சி அலுவலகத்தில் கொள்கைத் தலைவர்களுக்கு அஞ்சலி

தவெக எம்எல்ஏக்களுடன் விஜய் ஆலோசனை: கட்சி அலுவலகத்தில் கொள்கைத் தலைவர்களுக்கு அஞ்சலி
Updated on
1 min read

சென்னை: தவெக தலைவர் ஆட்சியமைக்க ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏக்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்.

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவியது. திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுக தலைமையில் மற்றொரு அணி களம் கண்டது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 233 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

விஜய்​யின் தவெக 108 இடங்களைக் கைப்​பற்றி தனிப்​பெரும் கட்​சி​யாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்​கத் தேவை​யான பெரும்​பான்மை பலமான 118 இடங்​களைப் பெறாத​தால், தமிழகத்தில் தற்​போது ‘தொங்கு சட்டப்​பேர​வை’ அமை​யும் சூழல் உரு​வாகி​யுள்​ளது.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற தவெக எம்எல்ஏக்களை விஜய் சந்திக்கிறார்.

மேலும், கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சியமைக்க ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அடுத்த நடவடிக்கை குறித்து விஜய் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், அதிமுக , விசிக , கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனிடையே, தற்போது அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திப்பு நடத்தி வருகிறார்கள்.

தவெக எம்எல்ஏக்களுடன் விஜய் ஆலோசனை: கட்சி அலுவலகத்தில் கொள்கைத் தலைவர்களுக்கு அஞ்சலி
தவெக ஆட்சி அமைக்க இன்னும் 10 சீட் தேவை - விஜய்க்கு ஆதரவு அளிக்​கப்​ போவது யார்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in