காங்., பாஜக ஆட்சியில் மாநில அந்தஸ்து வழங்காதது ஏன்? - புதுச்சேரி பிரச்சாரத்தில் விஜய் கேள்வி

தவெக பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற விஜய். படம்: எம்.சாம்ராஜ்

தவெக பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற விஜய். படம்: எம்.சாம்ராஜ்

Updated on
2 min read

புதுச்சேரி: புதுச்​சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தமிழக வெற்​றிக் கழகம் மற்​றும் கூட்​ட​ணிக் கட்​சி​யான நேயம் மக்​கள் கழக வேட்​பாளர்​களை ஆதரித்து தவெக தலை​வர் விஜய் நேற்று பிரச்​சா​ரம் செய்​தார்.

கொக்கு பார்க் சிக்​னல் அருகே உள்ள தட்​டாஞ்​சாவடி ஒழுங்கு முறை விற்​பனைக் கூட திடலில் திரண்ட தொண்​டர்​கள் மற்​றும் பொது​மக்​கள் மத்​தி​யில் வேட்​பாளர்​களை ஆதரித்து தவெக தலை​வர் விஜய் பேசி​ய​தாவது: புதுச்சேரியில் காங்​கிரஸ் 6 முறை ஆட்​சி​யில் இருந்​தது. இண்​டியா கூட்​ட​ணி​யில் காங்​கிரஸூம், திமுக​வும் கூட்​டணி என சொல்​லிக் கொண்டு சில தொகு​தி​களில் ஒருத்​தரை ஒருத்​தர் எதிர்த்து நிற்​கிறார்​கள்.

இன்​னொரு கூட்​ட​ணி​யாக என்​.ஆர்​.​காங்​கிரஸ் - பாஜக கூட்​டணி உள்​ளது. அது சேர்ந்த கூட்​டணி இல்​லை, சேர்ந்து சேர முடி​யாமல் போன சோர்ந்து போன கூட்​ட​ணி. தமிழகத்​தில் எப்​படி 2 கட்​சிகள் ரகசிய கூட்​டணி வைத்​துள்​ளார்​களோ, அதே ‘ஃபார்முலா’ தான் புதுச்​சேரி​யிலும் நடக்​கிறது.

புதுச்​சேரி மாநில அந்​தஸ்து கோரிக்கை எத்​தனை வருடங்​களாக கேட்​கப்​பட்டு வரு​கிறது. இந்த அந்​தஸ்தை இதற்கு முன் மத்​தி​யில் இருந்த காங்​கிரஸ் அரசும் தரவில்​லை; தற்​போதுள்ள பாஜக​வும் கொண்டு வரவில்​லை.

புதுச்​சேரிக்கு மாநில அந்​தஸ்து கொடுக்​கலாம் என 20 ஆண்​டு​களுக்கு முன்பே சுஷ்மா சுவ​ராஜ் அறிக்கை தந்​தும் கூட, தற்​போதுள்ள மத்​திய அரசு இதை கண்டு கொள்​ளவே இல்​லை. காங்​கிரஸ் அரசோ, பாஜக அரசோ மனசாட்சி இருந்​தால் கூறட்​டும்.

மக்​களே இந்த ஏமாற்று கூட்​ட​ணி​களுக்​கும் பொருந்தா கூட்​ட​ணி​களுக்​கும் ஓட்​டுப் போட்டு ஏமாந்து விடாதீர்​கள். சிறு​பான்மை சகோ​தரர்​கள் உள்​ளிட்ட அனைத்து மக்​களுக்​கும் பாது​காப்பு வேண்​டும் என வேஷம் போடும் கூட்​ட​ணியை நம்​பாதீர்​கள். சிறு​பான்​மை​யினருக்கு எதி​ரான கூட்​ட​ணி​யை​யும் நம்​பாதீர்​கள். இரண்டு பேருக்​கும் ஓட்​டுப் போடு​வது வீணானது.

உங்​களுக்கு நல்​லாட்சி வேண்​டும்; நம்​பிக்​கை​யான ஆட்சி வேண்​டும். தீயசக்தி திமுக இருக்​கிற ஓட்டை உடைச்​சலான காங்​கிரஸ் கூட்​ட​ணி​யும் வேண்​டாம். பாஜக இருக்​கிற கூட்​ட​ணி​யும் வேண்​டாம். மக்​களோடு மக்​களாக இருக்​கிற தவெக மற்​றும் அதன் கூட்​ட​ணி​யான நேயம் மக்​கள் கழகத்​தின் வேட்​பாளர்​களுக்​கு, உங்​கள் விஜய்க்கே வாக்​களிப்​ப​தாக நினைத்து வாக்​களி​யுங்​கள். உங்​கள் தேவை​கள் நிறைவேற தவெக துணை நிற்​கும். எங்​களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்​கள். உங்​களுக்கு துணை​யாக இருப்​பேன்.

தமிழகத்​தில் தவெக ஆட்சி அமை​யும். அதே​போல் புதுச்​சேரி​யிலும் தவெக ஆட்​சி​தான் அமைய வேண்​டும். ஒரு விரல் புரட்​சி​யான விசில் புரட்​சியை புதுச்​சேரி​யிலும் உரு​வாக்​குங்​கள். தவெக ஆட்​சிக்கு வந்​தால், புதுச்​சேரிக்கு முழு மாநில அந்​தஸ்து பெற சட்​டப்​படி 100 சதவீதம் முயற்​சிப்​போம். ஆட்சி அமைந்த 6 மாதங்​களில் உள்​ளாட்​சித் தேர்​தல் நடத்​தப்​படும்.

மகப்​பேறு உதவித்​தொகை​யாக ரூ.25 ஆயிரம் வழங்​கப்​படும். அனைத்து அரசு துறை காலி பணி​யிடங்​களும் நிரப்​பப்​படும். 100 சதவீத பயிர் காப்​பீடு வழங்​கப்​படும். மீன்​பிடிக்க செல்​லும் மீனவர்​களுக்கு ஒரு லிட்​டருக்கு ரூ.20 டீசல் மானி​யம் வழங்​கப்​படும். ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கும் ரூ.25 லட்​சம் மருத்​து​வக் காப்​பீடு வழங்​கப்​படும்.

வறுமைக்​கோட்​டுக்கு கீழ் உள்ள குடும்​பத்​துக்கு 200 யூனிட் வரை இலவச மின்​சா​ரம் வழங்​கப்​படும். புதுச்​சேரி மாநிலத்​துக்​கான தனி கலை, அறி​வியல் பல்​கலைக்​கழகம் உரு​வாக்​கப்​படும். காரைக்​கால், மாகே, ஏனாமில் 25 சதவீதவளர்ச்சி செல​வினங்​களுக்கு உத்​தர​வாதம் அளிக்​கப்​படும். இவ்​வாறு விஜய் பேசி​னார். தொடர்ந்து விஜய் கடலூர் சாலை​யில் ப்ர​விடன்​ஸ் மால் அருகே மற்​றும் தவளக்​குப்​பம்​ நான்​கு முனை சந்​திப்​பில்​ பிரச்​சாரம்​ மேற்​கொண்​டார்​.

<div class="paragraphs"><p>தவெக பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற விஜய். படம்: எம்.சாம்ராஜ்</p></div>
கேரளாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்: பிரதமர் மோடி உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in