பத்திரப் பதிவு தடை நீக்கம்: கரூரில் சர்ச்சையைக் கிளப்பிய முதல்வர் விஜய், எம்.பி. ஜோதிமணி சுவரொட்டிகள்

சுவரொட்டிகள்

சுவரொட்டிகள்

Updated on
1 min read

கரூர்: கரூரில் கோயில் நிலம் 3085 ஏக்கர் பத்திரப்பதிவு தடை நீக்கப்பட்டதை அடுத்து முதல்வர் விஜய்யை தேவதூதராகவும், எம்.பி. ஜோதிமணியை கரூர் மக்களின் மனதில் மாரியம்மனாக வாழ்ந்து கொண்டிருப்பவர் என சித்தரித்து நன்றி தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஒட்டியுள்ள சுவரொட்டியால் சர்ச்சை எழுந்துள்ளது.

கரூர் மாவட்டத்தில புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில், குப்புச்சிபாளையம் ரவீஸ்வரர் கோயில், வெஞ்சமாங்கூடலூர் விக்ருதீஸ்வரர் கோயில் என மொத்தம் 3,084.95 ஏக்கரில் உள்ள 3,390 பட்டாதாரர்களுக்கான பத்திரப்பதிவு தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் சி.முத்துக்குமரன் ஜூலை 11-ம் தேதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் தான் வைத்த கோரிக்கை அடிப்படையிலேயே பத்திரப்பதிவு தடை நீக்கப்பட்டதாக எம்.பி செ.ஜோதிமணி தெரிவித்தார். இதற்கிடையில் கரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கீர்த்தன் பெரியசாமி கரூர் திருமாநிலையூர், லைட்ஹவுஸ் முனை உள்ளிட்ட இடங்களில் முதல்வர் விஜய்யை தேவதூதன் என்றும், எம்பி ஜோதிமணியை மாரியம்மன் எனக்கூறி ஒட்டியுள்ள சுவரொட்டி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சுவரொட்டியில் சோனியா, கார்கே, கரூர் மாவட்ட தலைவர் ரமேஷ், மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டவர்களின் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும் முதல்வர் விஜய்யின் படம் அச்சிட்டு அவரது பின்னால் இரு இறக்கைள் உள்ளன. எம்பி ஜோதிமணியின் படத்தின் பின்னால் அம்மன் பின்னால் இருப்பது போல திருவாட்சியும், கையில் சூலாயுதம் இருப்பது போல அச்சிடப்பட்டுள்ளது.

மேலும், “கரூர் 3084 ஏக்கர் இனாம் நிலப் பிரச்சினையை நீக்கி தீர்த்து வைத்தது மக்கள் வெற்றி! வரலாற்று சாதனை! கரூர் மக்களின் நீண்ட காலக் கனவை நனவாக்கிய கர்த்தரின் தேவதூதராகிய தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக நின்ற கரூர் மக்களின் வீரமங்கை கரூர் மக்களின் இதயங்களில் மாரியம்மனாக வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் அக்கா ஜோதிமணி எம்பி அவர்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!! ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழே உங்கள் அன்பு தம்பி கீர்த்தன் பெரியசாமி கரூர் மாவட்ட இளைஞர்ச காங்கிரஸ் தலைவர் முகதூர் எனக் குறிப்பிட்டு, எக்ஸ், இன்ஸ்டாகிராம் முகவரிகளையும் அச்சிட்டுள்ளார்.

முதல்வர் விஜயை தேவதூதராகவும், எம்பி ஜோதிமணியை மாரியம்மனாகவும் சித்தரித்துள்ளது கரூரில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கரூர் எம்பி செ.ஜோதிமணியிடம் கேட்டப்போது, “இதுகுறித்து நீங்கள் அவரைதான் கேட்கவேண்டும்” என்றார்.

<div class="paragraphs"><p>சுவரொட்டிகள்</p></div>
“என் வாழ்நாளில் அன்புமணியை தலைவராக ஏற்க மாட்டேன்” - பாமக அருள் உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in