தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு

ஜெயராஜ், பெனிக்ஸ்

ஜெயராஜ், பெனிக்ஸ்

Updated on
1 min read

மதுரை: தமிழகத்​தில் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​திய சாத்தான்குளம் தந்​தை, மகன் காவல் நிலைய மரண வழக்​கில் இன்று தீர்ப்பு வெளி​யாகிறது.

தூத்​துக்​குடி மாவட்​டம், சாத்​தான்​குளத்​தைச் சேர்ந்​தவர் ஜெய​ராஜ், இவரது மகன் பெனிக்​ஸ். இவர்​கள் செல்​போன் கடை நடத்தி வந்​தனர்.

கடந்த 2020 ஜூன் 19-ல் கரோனா ஊரடங்கு நேரக் கட்​டுப்​பாட்​டைத் தாண்டி கடையைத் திறந்து வைத்​திருந்​த​தாகக் கூறி ஜெய​ராஜ், பெனிக்ஸ் ஆகிய இரு​வரை​யும் போலீ​ஸார் விசா​ரணைக்​காக சாத்தான்குளம் காவல் நிலை​யம் அழைத்​துச் சென்​றனர்.

அங்கு தந்​தை, மகன் ஆகிய இரு​வரை​யும் போலீ​ஸார் மிகக் கடுமை​யாகத் தாக்​கினர். இதில் பலத்த காயமடைந்த நிலை​யில் முதலில் பெனிக்​ஸ், பின்​னர் ஜெய​ராஜ் ஆகிய இரு​வரும் அடுத்​தடுத்து பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.

தமிழகம் முழு​வதும் பெரும் அதிர்​வலையை ஏற்​படுத்​திய இந்​தச் சம்​பவம் தொடர்​பான வழக்கை உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றியது.

இதையடுத்து சிபிஐ போலீ​ஸார் கொலை வழக்​குப் பதிவு செய்து சாத்தான்குளம் காவல் ஆய்​வாளர் தர், உதவி ஆய்​வாளர்​கள் பால​கிருஷ்ணன், ரகு கணேஷ், தலை​மைக் காவலர்​கள் முரு​கன், காவலர்​கள் முத்​து​ ராஜா, செல்​லத்​துரை, தாமஸ் பிரான்​சிஸ், வெயில் முத்து உள்​ளிட்ட 9 பேரை கைது செய்து மதுரை மத்​திய சிறை​யில் அடைத்​தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலா​வது கூடு​தல் நீதி​மன்​றத்​தில் கடந்த 5 ஆண்​டு​களாக விசா​ரணை​யில் இருந்​தது. சிபிஐ குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்து வழக்​கின் விசா​ரணை தீவிர​மாக நடை​பெற்று வந்​தது.

கைதான 9 பேரும் ஜாமீன் கோரி விசா​ரணை நீதி​மன்​றம், உயர் நீதி​மன்​றம், உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனுக்​கள் தள்​ளு​படி​யா​யின. கைதான நாளி​லிருந்து 9 பேரும் சிறை​யில் உள்​ளனர்.

இந்த வழக்​கின் விசா​ரணையை 6 மாதங்​களில் முடிக்க உயர் நீதி​மன்​றம் ஏற்​கெனவே உத்​தர​விட்​டது. கால அவகாசம் முடிந்த நிலை​யில், மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டு விசா​ரணை நீதி​மன்​றம் தரப்​பில் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனுத் தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம் 3 மாதம் அவகாசம் வழங்கி கடந்​தாண்டு நவம்​பர் 26-ல் உத்​தர​விட்​டது.

இதையடுத்து விசா​ரணை நீதி​மன்​றத்​தில் விசா​ரணை சூடு பிடித்​தது. தின​மும் விசா​ரணை நடந்​தது. இது​வரை அரசுத் தரப்​பில் 52 சாட்​சிகள், குற்​றம் சாட்​டப்​பட்​டோர் தரப்​பில் 7 சாட்​சிகள் விசா​ரிக்​கப்​பட்​டன.

271 ஆவணங்​கள் குறி​யீடு செய்​யப்​பட்​டுள்​ளன. லத்தி உள்​ளிட்ட 57 சாட்​சி​யப் பொருட்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன. விசா​ரணை முடிந்த நிலை​யில் தீர்ப்பு தள்​ளிவைக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் இந்த வழக்​கில் இன்று (மார்ச் 23) மதுரை மாவட்ட கூடு​தல் அமர்வு நீதி​மன்​றம் தீர்ப்​பளிக்​கிறது.

<div class="paragraphs"><p>ஜெயராஜ்,&nbsp;பெனிக்ஸ் </p></div>
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 23 மார்ச் 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in