

மேஷம்: பழைய நண்பர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். குடும்பத்தினரின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வராது என்று நினைத்த பழைய கடன் பாக்கிகள் வந்துசேரும்.
ரிஷபம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உடல்சோர்வு, வயிற்றுப் பிரச்சினைகள் வந்து குணமாகும். குடும்பத் தினரை அனுசரித்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டு.
மிதுனம்: வியாபாரம் தொடர்பாக முக்கியப் பிரமுகர்களின் உதவியை நாடுவீர்கள். குடும்பத்தினரின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவுகள் வரும். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
கடகம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மன நிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். எதிலும் நிதானம் அவசியம்.
சிம்மம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். அடிக்கடி தொந்தரவு கொடுத்த வாகனத்தை மாற்றுவீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.
கன்னி: உங்கள் அறிவாற்றல், புத்திசாலித்தனம் வெளிப்படும். பல வகையிலும் பணப் புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்களுடன் நட்பு மலரும். அதனால் ஆதாயம், அனுகூலமும் உண்டாகும். வீட்டில் அமைதி நிலவும். ஆன்மிகத்தில் மனம் செல்லும்.
துலாம்: சின்னச் சின்ன கவலைகள் வந்துபோகும். நீங்கள் ஒன்று பேச, மற்றவர்கள் வேறுவிதமாக புரிந்து கொள்வார்கள். யாரிடமும் தேவையற்ற பேச்சுகள், வாக்குவாதங்கள் வேண்டாம். நம்பிக்கை, உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
விருச்சிகம்: நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். உங்களது உற்சாகமான, சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள்.
தனுசு: தேவையற்ற தடுமாற்றம் நீங்கும். எடுத்த காரியத்தை எப்படி யாவது முடிக்க வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். அலுவலகத்தில் வேலைகளை விரைந்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.
மகரம்: உங்கள் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். அரசு, வங்கி வகையில் ஆதாயம் உண்டு.
மீனம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். சேமிப்புகள் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு, அந்தஸ்து உயரும். குடும்பத் துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் திருப்தி தரும்.